Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பின் நண்பர்.. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு.. யார் இவர்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டார். இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பதவியேற்று கொண்டார். இவர் யார் பின்னணி என்ன? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து பல்வேறு நாடுகளின் தூதர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் கடந்த 2023 மே மாதம் 11ம் தேதி முதல் எரிக் கார்செட்டி நம் நாட்டுக்கான அமெரிக்கதூதராக இருந்தார். இவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோபைடனால் நியமிக்கப்பட்டார்.

donald trump us india ambassador

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அவர் பதவியை இழந்தார். 2025 ஜனவரி 20ம் தேதி டிரம்ப் அமெரிக்க பதவியேற்றார். அன்று முதல் நம் நாட்டுக்கு அமெரிக்க தூதர் இடம் காலியாக இருந்தது.

இதையடுத்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக யாரை நியமிப்பது? என்பது பற்றி டொனால்ட் டிரம்ப் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புதிய தூதராக டிரம்ப் தனக்கு மிகவும் நெருக்கமான அதேவேளையில் நண்பர் போல் செயல்பட்டு வரம் செர்ஜியோ கோரை நியமித்தார். அதன்பிறகு சென்ட் சபை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து இந்தியாவுக்கான புதிய தூதராக வெள்ளை மாளிகையில் வைத்து செர்ஜியோ கோர் பதவியேற்று கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அவர் பதவியேற்றார். இதுபற்றி செர்ஜியோ கோர் கூறுகையில், ‛‛இது எனது வாழ்நாளுக்கு கிடைத்த மரியாதை. முதலில் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமெரிக்கா - இந்தியா இடையேயான இருநாடுகளின் உறவை மேம்படுத்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பதவியை எனக்கு அளித்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்காக சிறப்பான பணியை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் '' என்றார்.

இந்தியாவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர். இவரது வயது வெறும் 38 தான். ஆனால் டிரம்பின் நம்பிக்கையை பெற்றவர். கிட்டத்தட்ட இருவரும் நண்பர் போல் உள்ளனர். அவரது நியமனத்தின்போதும் கூட டிரம்ப், செர்ஜியோ கோரை நண்பர் என்றே கூறி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார். இப்படி நெருக்கமான பந்தத்தால் தான் அவரை நம் நாட்டுக்கான தூதராக மட்டுமின்றி தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். டிரம்ப் மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவார்.

டிரம்ப் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருடன் இணைந்து வின்னிங் டீம் பப்ளிஷிங்கை தொடங்கினர். இது அதிபர் டொனால்ட் டிரம்பின் 2 புத்தகங்களை வெளியிட்டது. டிரம்ப் பதவியேற்றது முதல் அரசு துறைகளில் பணியாற்றும் நபர்களின் தேர்வுகளை சரிபார்த்தார். நாசாவின் தலைவராக ஜாரெட் ஐசக்மேனை நியமிக்க டிரம்ப் முடிவு செய்தார். அதன்பிறகு அவர் கைவிட்டார். இதில் ஜாரெட் ஐசக்மேனின் தேர்வுக்கு காரணமாக இருந்தவர் இந்த செர்ஜியோ கோர்.

டிரம்பின் அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற வழிவகுத்தார். பல்வேறு பிரசாரங்களில் அவர் பணியாற்றினார். அமெரிக்காவின் வேலையில் அமெரிக்காவினருக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையில் செர்ஜியோ கோர், டிரம்பை போல் உறுதியாக இருந்தது. இதனால் டிரம்ப் நிர்வாகத்தில் ஏராளமான அமெரிக்கர்களை பணியமர்த்தினார். தற்போது இந்தியா - அமெரிக்கா உறவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் டிரம்ப் தனது நண்பர் செர்ஜியோ கோரை தூதராக அனுப்பி உள்ளார்.

இதன் பின்னணியில் இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது என்னவென்றால் இந்தியா - சீனா இடையேயான உறவு நெருக்கமாவதை தடுப்பதும் தான். இந்தியாவும், சீனாவும் கைகோர்த்தால் அது அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். தெற்காசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கும். இதனால் இந்த மேட்டரை அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எனவே தான் டிரம்ப் தனக்கு நெருக்கமான, நம்பிக்கை பெற்ற செர்ஜியோ கோரை நம் நாட்டுக்கான அமெரிக்க தூதராக அனுப்பி வைத்துள்ளதாக சர்வசேத அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+