வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை புகழ்ந்து பேசிய சுதா சுந்தரி...யார் அவர்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையில் அந்த நாட்டின் குடியுரிமை பெறுவேன் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை என்று சுதா சுந்தரி நாராயணன் தெரிவித்துள்ளார். இவரை வரவேற்று ட்ரம்ப் பேசுகையில், ''இனம், மதம், நிறம் என பல்வேறு தன்மைகளை கொண்ட அற்புதமான நாட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். சுதா சுந்தரி தனித்துவ வெற்றி பெற்றவர்'' என்று புகழாரம் சூட்டினார்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வேலை நிமிர்த்தமாக இடம் பெயர்ந்தவர் சுத்த சுந்தரி நாராயணன். இவருடன் பொலிவியா, லெபனான், சூடான், கானா ஆகிய நாடுகளில் இருந்தும் தலா ஒருவருக்கு ட்ரம்ப் குடியுரிமை வழங்கினார். அமெரிக்காவில் சுதா சுந்தரி ஐடி தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

Who is Sudha Sundari Narayanan; received US citizenship from Donald Trump

அமெரிக்க அதிபரின் கையில் அந்த நாட்டின் குடியுரிமை பெற்று இருப்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். ''இந்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்து எனது நண்பர்கள் என்னை அழைத்து வாழ்த்தினர். எனக்கு அதிர்ச்சியாக, ஆச்சரியமாக இருந்தது இந்த நிகழ்வு அமைந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டில் தனது கணவருடன் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தார். மாணவர் விசாவில் வந்து இருந்தார். எப் 1 விசா வைத்து இருப்பவர்கள் எப் 2 விசாவில் அமெரிக்காவுக்கு வரலாம். அதன்படி அமெரிக்காவுக்கு வந்தார்.

நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடியா.. வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்.. உண்மை என்ன?நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடியா.. வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்.. உண்மை என்ன?

Recommended Video

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்கள் ஏன்? எதற்கு? | Mosquitoes | Oneindia Tamil

    இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வருகின்றனர். தற்போது நிரந்தர அமெரிக்க குடிமகளாக அந்தஸ்து பெற்றுள்ளார். இவரை ட்ரம்ப் பாராட்டும்போது, ''சுதா சிறந்த ஐடி ஊழியர். சுதாவும், அவரது கணவரும் இரண்டு அழகான குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். உங்களது வாழ்க்கையில் அவர்கள் இருவரும் ஆப்பிள் போன்றவர்கள். நீங்கள் இன்று எங்களுடன் இருக்கிறீர்கள். விலை மதிப்பிட முடியாத பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள். அதுதான் அமெரிக்காவின் குடியுரிமை என்ற அந்தஸ்து. இதைவிட பெரிய கவுரவமும், உரிமையும் உலகில் இல்லை '' என்றார்.

    English summary
    Who is Sudha Sundari Narayanan; received US citizenship from Donald Trump
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X