"ரஷ்ய உளவாளி" என வம்பில் மாட்டிய துளசி.. தேசிய புலனாய்வு இயக்குநராக நியமனம்! டிரம்ப் போட்ட உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் தேசிய புலனாய்வு இயக்குநராகத் துளசி கபார்டை தேர்வு செய்துள்ளார். துளசி கபார்ட் இந்து மதத்தைச் சேர்ந்தவராவார். இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு வருவதும் இதுவே முதல்முறையாகும். யார் இந்த துளசி கபார்ட்.. இவரது நியமனம் எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் தனது கேபினட் அமைச்சர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

துளசி: மேலும், தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கும் ஆட்களைத் தேர்வு செய்து வருகிறார். இதற்கிடையே இப்போது தேசிய புலனாய்வு இயக்குநராகத் துளசி கபார்டை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு வரை துளசி ஜனநாயக கட்சியில் இருந்தவர். அதன் பிறகே அவர் குடியரசு கட்சியில் இணைந்தார். குடியரசு கட்சியில் இணைந்து 2 ஆண்டுகளில் அவருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கப் போகிறது.
அமெரிக்க உளவுத் துறை செயல்பாட்டை மொத்தமாக மாற்றியமைக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். உளவுத் துறை மீது டிரம்பிற்கு கடந்த காலங்களில் அவநம்பிக்கையே இருந்துள்ளது. ஏற்கனவே தான் அதிபராக இருந்த போதும் சரி, அதிபர் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்த போதும் சரி, புலனாய்வு அமைப்புகளை தனக்கு எதிராகச் செயல்பட்டதாக டிரம்ப் நம்புகிறார். இதன் காரணமாகவே உளவுத் துறை செயல்பாட்டை மொத்தமாக மாற்றப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் நியமனம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஜனநாயகக் கட்சி சார்பில் முன்பு அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பிய துளசிக்கு இரு கட்சிகளிலும் நல்ல ஆதரவு உள்ளது. இப்போது குடியரசு கட்சியில் இருக்கும் அவரை தேசிய புலனாய்வு இயக்குநராக நியமிக்க முடிவு செய்துள்ளேன். ஜனநாயக உரிமையை வென்றெடுப்பதிலும் அமைதியைப் பாதுகாப்பதிலும் துளசி சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பகுதிகளில் அமெரிக்க ராணுவம் சார்பாக பணியாற்றி இருக்கிறார். கடந்த காலத்தில் தேசிய புலனாய்வு இயக்குநர்களாக இருந்தவர்களைப் போல இவருக்கு உளவுத் துறையில் அனுபவம் எதுவும் இல்லை.
யார் இவர்: அமெரிக்கன் சமோவாவில் பிறந்த துளசி, ஹவாயில் வளர்ந்தார். . 1999 முதல் 2022 வரை ஜனநாயக கட்சியில் இருந்த துளசி, வெறும் 21 வயதில் ஹவாய் சட்டசபைக்குத் தேர்வானார். இருப்பினும் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ராணுவத்தில் சேர விண்ணப்பித்த அவர், ராணுவத்தில் சில காலம் பணியாற்றினார். பிறகு மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார்.
கடந்த 2013ம் ஆண்டில் அவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும் தேர்வானார். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் இந்து என்ற சிறப்பையும் அவர் பெற்றார். அப்போது அவர் கபார்ட் பகவத் கீதையுடன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவர் ஹவுஸ் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி கமிட்டியில் இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார்.
இந்தியர் இல்லை: பலரும் துளசி இந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் எனத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அவளுக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லை. துளசியின் தாயார் இந்து மதத்திற்கு மதம் மாறினார். இதனால் தன் குழந்தைகளுக்கு இந்து பெயர்களை வைத்தார். இந்து என்ற அவரது பெயரை வைத்தே பலரும் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என நினைக்கிறார்கள்.
மேலும், ஜனநாயக கட்சியில் இருந்த போது அவர் சொந்த கட்சியையே விமர்சித்து இருக்கிறார். ஜனநாயக கட்சி போரை எதிர்க்கத் தவறிவிட்டதாகக் கடந்த 2020ம் ஆண்டில் குற்றஞ்சாட்டினார். 2022இல் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகிய அவர், பிறகு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவர் டிரம்பின் முக்கிய ஆதரவாளராக அறியப்படுகிறார். தேர்தலுக்கு முன்பு டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே விவாதம் நடந்த போது டிரம்பிற்கு இவர் தான் பெரியளவில் உதவினார்.
ரஷ்ய உளவாளி எனச் சர்ச்சை: கடந்த 2022ல் இவர் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கினார். அதாவது அவர் உக்ரைனில் அமெரிக்க நிதியுதவியுடன் பயோ ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறியது சர்ச்சையானது. இதற்காக அப்போது பலரும் துளசியை ரஷ்ய உளவாளி, ரஷ்யக் கைக்கூலி என்றெல்லாம் அழைத்தனர். உக்ரைன் போரையை நியாயப்படுத்த ரஷ்யா தான் இதுபோன்ற போலி செய்திகளைக் கிளப்பிவிடுவதாகவும் அதே கருத்தைத் துளசியும் சொல்லி இருப்பதை ஏற்க முடியாது என்றும் பலரும் சாடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications