ஆஹா! இந்தியாவில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படாததற்கு இதுதான் காரணமா? நிபுணர்கள் சொல்லும் தகவலை பாருங்க

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாததற்கான காரணங்கள் குறித்து நிபுணர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாததற்கான காரணங்கள் குறித்து நிபுணர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதேபோல், துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

துருக்கி- சிரிய எல்லையில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கமும் அதனால் ஏற்பட்ட பெரும் சேதங்களுமே இதற்கு காரணம். துருக்கி - சிரியா ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

துருக்கியை அதிர வைத்த நிலநடுக்கம்

துருக்கியை அதிர வைத்த நிலநடுக்கம்

துருக்கியில் மட்டும் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையிலும் இன்னமும் கூட அந்நாட்டில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இந்த நிலநடுக்கம் அந்த நாட்டில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பாருங்கள்.. துருக்கியை அதிர வைத்த நிலநடுக்கத்திற்கு பிறகு புவியியல் வல்லுனர்கள் நிலநடுக்கங்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

நிபுணர்கள் சொல்வது என்ன?

"சிறிய அளவிலான நில அதிர்வுகள் புவித்தட்டுக்களின் அழுத்தங்களை குறைக்க உதவுகின்றன. இதனால், பயங்கர நில நடுக்கங்கள் ஏற்படாமல் பேரழிவில் இருந்து இந்தியாவை காப்பதற்கு உதவி செய்கின்றன. இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இந்தியா அதை எதிர்கொள்ள நன்கு தயராக உள்ளது. இந்தியாவில் நன்கு பயிற்சி பெற்ற அர்ப்பணிப்பு மிக்க தேசியர் பேரிடர் மீட்பு படை உள்ளது" என்றனர்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

நிபுணர்கள் சொல்வது என்ன?

"சிறிய அளவிலான நில அதிர்வுகள் புவித்தட்டுக்களின் அழுத்தங்களை குறைக்க உதவுகின்றன. இதனால், பயங்கர நில நடுக்கங்கள் ஏற்படாமல் பேரழிவில் இருந்து இந்தியாவை காப்பதற்கு உதவி செய்கின்றன. இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் இந்தியா அதை எதிர்கொள்ள நன்கு தயராக உள்ளது. இந்தியாவில் நன்கு பயிற்சி பெற்ற அர்ப்பணிப்பு மிக்க தேசியர் பேரிடர் மீட்பு படை உள்ளது" என்றனர்.

முச்சந்திப்பு மிகவும் இறுக்கமானதாக

முச்சந்திப்பு மிகவும் இறுக்கமானதாக

மேலும் இந்தியாவில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படாமல் தடுப்பது பற்றி புவி அதிர்வுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ஓ.பி.மிஷ்ரா கூறியதாவது:- இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள முச்சந்திப்பு சிறிய அளவிலான அதாவது லேசான நிலநடுக்கங்கள் காரணமாக தொடர்ந்து அழுத்தத்தை விடுவிக்கிறது. இவற்றில் சில நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4 மற்றும் 5 என்ற அளவில் பதிவாகக் கூடியது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இருக்கும் இந்த முச்சந்திப்பு அதிக அழுத்தத்தை தாங்கக் கூடியதாகும். இந்த முச்சந்திப்பு மிகவும் இறுக்கமானதாகவும் கச்சிதமாகவும் உள்ளது. இந்த அழுத்தம் உடையும் பட்சத்தில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

துருக்கி, சிரியாவில் பேரழிவு ஏன்?

துருக்கி, சிரியாவில் பேரழிவு ஏன்?

மேலும் துருக்கியில் சக்தி வய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது ஏன் என்பது குறித்து கூறிய ஓ.பி.மிஷ்ரா கூறுகையில், "துருக்கியை பொறுத்தவரை முன்பு சொன்னதை போல முச்சந்திப்புகள் 2 இருக்கிறதாம். அவற்றில் ஒரு முச்சந்திப்பான அரேபியன் தட்டு, அனடோலியன் தட்டு, ஆப்பிரிக்க தட்டு ஆகியவை சந்திக்கும் முச்சந்திப்பு உடைந்ததன் காரணமாகவே துருக்கி, சிரியா பேரிழப்புகளுக்கு ஆளாகியதாம். துருக்கி, சிரியாவில் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படாத காரணத்தால் அதிக அழுத்தம் குவிந்தது. அதன் காரணமாகவே துருக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களை சந்திக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+