நாட்டிற்கே பேராபத்து.! சீனாவுடன் சீக்ரெட் உறவு? முதலில் இந்த மஸ்கை விசாரியுங்கள்! ஜோ பைடன் பரபர
வாஷிங்டன்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க். சமீபத்தில் ட்விட்டரை வாங்கியதன் மூலம் இவர் உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பினார்.
ப்ளூடிக் கட்டணம், ஆட்குறைப்பு எனத் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே இவரைப் பற்றி பைடன் கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு ஆபத்து
51 வயதான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், போரிங்க கம்பெனி என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இன்னும் பல நிறுவனங்களை நடத்தி வரும் இவர், பல வெளிநாடுகளிலும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்கின் சில முதலீடுகளால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இது தொடர்பாக விசாரிக்க வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ளதாகக் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின.

ஜோ பைடன்
இருப்பினும், அதை அப்போதைய வெள்ளை மாளிகை மறுத்து இருந்தது.. இந்தச் சூழலில் தான் சவுதி தொழிலதிபர்களின் உதவியுடன் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பைடன், "மற்ற நாடுகளுடன் எலான் மஸ்க் வைத்திருக்கும் உறவைக் கவனிப்பதில் தவறில்லை. அவரை தவறாக எதையும் செய்யவில்லை என்றாலும் கூட இதை ஆய்வு செய்யலாம். அதற்காக நான் கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறவில்லை" என்று கூறியிருந்தார்.

சவுதி
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கடந்த 2018இல் கொலை செய்யப்பட்டதில் இருந்தே அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் கஷோகியைக் கொல்ல உத்தரவிட்டார் என்று அமெரிக்க உளவுத் துறை கூறுகிறது. ஆனால், இதைச் சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்தே வருகிறது.

சீனா
இந்தச் சூழலில் தான் சவுதி நிறுவனங்களின் உதவியுடன் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி மட்டுமின்றி சில சீன நிறுவனங்களின் பங்களிப்பும் கூட இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எலான் மஸ்கிற்கு பணத்தை அள்ளி தரும் டெஸ்லா நிறுவனம் பெரும்பாலும் சீன சந்தையையே நம்பி இருக்கிறது. மேலும், டெஸ்லா செயல்பாடுகளுக்கும் சீன நிறுவனங்கள் அதிகம் நிதி வழங்குகிறது.

ஆபத்து
சீன நிறுவனங்கள் அனைத்தும் சீன அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ட்விட்டர் தளம் அரசியல் கருத்துகளைப் பரப்ப முக்கியமான ஒன்று என்பதால் எலான் மஸ்கிற்கும் சீன மற்றும் சவுதி நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு அமெரிக்க அரசுக்குக் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, ட்விட்டரை பயன்படுத்தி சீனா அமெரிக்காவை உளவு பார்க்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கோடிக் கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் சீன கைகளில் செல்லும் வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

விசாரணை
அமெரிக்க அதிபர் பைடன் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சவுதி அரேபியா, கத்தார் மற்றும் சீனாவுடனான எலான் மஸ்கிற்கு உள்ள நிதி தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தலாம். இதற்காக அங்கு அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழு (CFIUS) உள்ளது. இந்த குழு அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களால் எதாவது தேசியப் பாதுகாப்பு ஆபத்து உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

அடுத்து என்ன நடக்கும்
இந்த அமைப்பும் எலான் மஸ்கின் முதலீடுகள் அமெரிக்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேலை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீட்டால் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது தெரிய வந்தால், வெளிநாட்டினை கட்டாயப்படுத்தி அமெரிக்காவில் வைத்துள்ள முதலீடுகளைத் திரும்பப் பெற வைக்க பைடனால் முடியும். இந்த விஷயத்தில் வரும் காலத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications