ஐஎம்எப்-ல் பாகிஸ்தானுக்கு எதிரான வாக்கெடுப்பு.. இந்தியா புறக்கணித்தது ஏன்? வெளியான காரணம்
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் நிதி கேட்டு கெஞ்சிய நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்து உள்ளது. எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்ததா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்த நிலையில், புறக்கணிப்பு ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது. விலையேற்றம், பொருளாதார நெருக்கடி என திண்டாடிக்கொண்டு இருந்தாலும் பாகிஸ்தானின் கொட்டம் அடங்கவில்லை. இந்தியாவை சீண்டும் விதமாக அவ்வப்போது அடாவடி செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு அவர்களுக்கு மறைமுக உதவிகளையும் பாகிஸ்தான் செய்து வருகிறது.

8,500 கோடி கடன் கேட்ட பாகிஸ்தான்
பாகிஸ்தானின் இந்த சதி வேலைகளை இந்தியா முறியடித்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதுமே பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தைகைய சூழலில்தான் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் உள்பட எல்லையோர மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடத்தை குறிவைத்து கூட பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்தியா முறியடித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான், தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை நாடியது.
வாக்கெடுப்பில் புறக்கணித்த இந்தியா
எனினும் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது எனவும், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு சர்வதேச நாணய நிதியம் அமைப்பை கேட்டுக்கொண்டது.
எனினும், தங்களது நாட்டிற்கு இந்த நிதி மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது என பாகிஸ்தான் கெஞ்சியது. இதையடுத்து, 8500 கோடி ரூபாய் கடன் வழங்க ஐ எம் எப் ஒப்புதல் வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இவ்வாறு கூறிவந்தாலும் ஐ.எம்.எப் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நாணய நிதியத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது ஏன்? என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் நோ என்ற ஆப்ஷன் இல்லாததால், இந்தியா புறக்கணித்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஏன் இந்தியா புறக்கணித்தது?
ஐஎம் எப் எக்ஸ்கியூட்டிவ் போரில் 25 இயக்குநர்கள் உள்ளனர். நாடுகள் அல்லது குழுக்களின் பிரதிநிதிகள் இதில் அடங்குவார்கள். கடனுக்கு ஒப்புதல் வழங்குதல், அன்றாட செயல்பாட்டு நடவடிக்கைகளை கையாளுதல் உள்ளிட்ட நடவடிகைகள் நடைபெறுகின்றன. இதில் வாக்கெடுப்பு நடைபெறும் போது இயக்குனர்களாக உள்ளவர்கள் ஆதரவு அல்லது புறக்கணிக்க முடியும்.
முடியாது என்று சொல்வதற்கான ஷரத்து இதில் இல்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையில் ஒரு நாட்டிற்கு ஒரு வாக்கு உண்டு. ஆனால், ஐ.எம்.எப்பில் அப்படியான ஒரு முறை இல்லை. ஒவ்வொரு பிரதிநிதியின் பொருளாதார அளவினை பொறுத்தை இது மாறுபடும். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விகிதாசார அடிப்படையில் அதிக வாக்கு சதவிகிதம் உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications