பாஸ்மதி அரிசியால் வெடிக்கும் பிரச்சனை.. இந்தியாவை டிரம்ப் மிரட்டுவது ஏன்? தோற்றுப்போகும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இது போதாது என்று இப்போது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பாஸ்மதி அரிசியின் மீது கண்வைத்துள்ளார். இந்தியா தனது பாஸ்மதி அரசியை அமெரிக்காவில் கொட்டுகிறது. இதனால் கூடுதல் வரி விதிக்கும் சூழல் வரும் என்று எச்சரித்துள்ளார். இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் பாஸ்மதி அரிசியை குறிவைத்து வரி மிரட்டல் விடுத்து இருப்பது ஏன்? நம் நாட்டின் பாஸ்மதி அரிசிக்கு மாற்றாக அமெரிக்கா உருவாக்கிய டெக்ஸ்மதி, ஜாஸ்மதி அரிசிகளின் நிலை என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு ஏற்கனவே 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதன் அடுத்தக்கட்டமாக டிரம்ப் மீண்டும் நம் நாட்டை மிரட்ட தொடங்கி உள்ளார். இந்த முறை அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் பாஸ்மதி அரிசி. இதுபற்றி கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார்.

basmati donald trump india

டிரம்ப் கூறும்போது, ‛‛இந்தியா தனது பாஸ்மதி அரிசியை அமெரிக்காவில் கொட்டுகிறது. இதனால் கூடுதல் வரி விதிக்கும் நிலை வரலாம்'' என்றார். நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகப்படியாக பாஸ்மதி அரிசி ஏற்றுமதி ஆகிறது. அதனை தான் டிரம்ப் குறிப்பிட்டு கூடுதல் வரி விதிப்பதாக தெரிவித்தார்.

மேலும் திடீரென்று டிரம்ப் நம் நாட்டின் பாஸ்மதி அரிசியை குறிவைத்து வரி விதிப்பதாக கூறியிருப்பதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதுபற்றி நாம் விரிவாக பார்க்கலாம். அதாவது ஒரு காலத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் கோதுமை தான் நம் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு முக்கிய உணவுப்பொருளாக மாறியது. ஆனால் இப்போது அப்படியான நிலை இல்லை. நம் நாட்டிலேயே அதிகப்படியான கோதுமை உற்பத்தியாகிறது.

1960களில் அமெரிக்காவின் PL-480 திட்டத்தின் கீழ் நாம் அமெரிக்காவிடம் இருந்து கோதுமையை பெற்றோம். அது தரமற்ற நிலையில் இருந்ததாக இன்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. அதேவேளையில் நம் நாட்டின் பாஸ்மதி அரிசியை அமெரிக்கா கைமாறாக பெற்றது. நம் நாட்டில் இருந்து அதிகப்படியான பாஸ்மதி அரிசி அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது. இப்போதும் அது தொடர்ந்து வருகிறது. நம் நாடு அமெரிக்காவின் கோதுமையை கைவிட்டாலும் கூட நம் நாட்டின் பாஸ்மதி அரிசியை அமெரிக்காவால் குறைக்க முடியவில்லை.

இன்னும் சொல்லபோனால் பாஸ்மதி அரிசிக்கு மாற்றாக அமெரிக்கா கொண்டு வந்த அரிசிகளை அந்த நாட்டு மக்களே விரும்பவில்லை. பாஸ்மதி அரிசிக்கு மாற்றாக அமெரிக்கா டெக்ஸ்மதி, ஜாஸ்மதி போன்ற கலப்பின அரிசி வகைகளை உருவாக்கியது. இதில் டெக்ஸ்மதி அரிசி 1980 காலக்கட்டத்தில் அமெரிக்காவின் டெக்சாஸில் பயிரிடப்பட்டு விளைவிக்கப்பட்டது. இதனால் டெக்ஸ்மதி என்று பெயர் வைக்கப்பட்டது.
டெக்சாஸின் ‛ரைஸ் டெக்' என்ற நிறுவனம் பாஸ்மதி அரிசியை கலப்பாக கொண்டு டெக்ஸ்மதி அரிசியை உருவாக்கியது. அதேபோல் தாய்லாந்து நாட்டின் ஜாஸ்மின் அரிசியை கலப்பாக கொண்டு ஜாஸ்மதி அரிசி உருவாக்கியது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசியை குறைக்கும் நோக்கத்தில் இந்த அரிசிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த டெக்ஸ்மதி, ஜாஸ்மதி அரிசிகளை அமெரிக்காவில் இருப்போர் விரும்பவில்லை. ஏனென்றால் பாஸ்மதி அரிசி கொடுக்கும் சுவை, நறுமணம், மிருதுவான தன்மை, அரிசியின் நீளம் உள்ளிட்டவை அமெரிக்காவின் டெக்ஸ்மதி, ஜாஸ்மதி உள்ளிட்ட அரிசிகள் தரவில்லை.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இமயமலையின் அடிவார பகுதிகளில் விளையும் பாஸ்மதி அரிசி தனித்துவமான சுவை கொண்டது. இந்த அரிசியை சமைக்கும்போது அதன் உண்மையான நீளத்தை விட இரண்டு மடங்கு வரை நீளமாக வரும். உணவு மிகவும் சாப்ட்டாகவும், தனித்தன்மையுடனும் இருக்கும். அதோடு 2-அசெடைல்-1-பைரோலைன் (2-acetyl-1-pyrroline) என்ற மூலக்கூறு சாதாரண அரிசியை விட 12 மடங்கு அதிகமாக இருப்பதால் பாஸ்மதியின் நறுமணம் அதிகமாக உள்ளது. 12 மாதங்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

இதனால் தான் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் அமெரிக்காவால் இன்றும் நம்மை புறக்கணிக்க முடியவில்லை. அதோடு அமெரிக்காவுக்கான பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இன்றும் முதலிடத்தில் நம் நாடு உள்ளது. இது அமெரிக்கர்கள் இன்றளவும் நம் நாட்டின் பாஸ்மதி அரிசியை விரும்பி சாப்பிடுவதற்கான சான்று.

டெக்ஸ்மதியை எடுத்து கொண்டால் அது அமெரிக்காவில் புலாவ் வகை உணவுகளுக்கு ஏற்றதாக அறியப்படுகிறது. ஜாஸ்மதி சாலட் மற்றும் வறுவல் சார்ந்த உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு அரிசிகள் பயன்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகள் கடந்தும் கூட இந்த டெக்ஸ்மதி, ஜாஸ்மதி அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டாலும் கூட பாஸ்மதி அரிசிக்கு மாற்றாக இன்னும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை.

2023-2024ம் நிதியாண்டை எடுத்து கொண்டால் அமெரிக்காவின் பாஸ்மதி இறக்குமதியில் இந்தியா 88 சதவீதத்தையும், பாகிஸ்தான் 9 சதவீதத்தையும் கொண்டு இருந்தன. இதனால் அமெரிக்க சந்தையில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி அசைக்க முடியாத உணவு பொருளாகவே உள்ளது. அதேபோல், 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு 22.5 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு 392 மில்லியன் டாலராகும். இதில் 86 சதவீதம் பாஸ்மதி அரிசியாகும். இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் மொத்த அரிசியில் 85% பாஸ்மதி அரிசியாகவே உள்ளது. இதுதான் டிரம்பின் கண்ணை உறுத்துகிறது.

இந்நிலையில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்காவில் நம் நாட்டின் பாஸ்மதி அரிசியின் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் அரிசியின் மீது 53 சதவீத வரி உள்ளது. டிரம்ப் இன்னும் வரி விதிக்கும்பட்சத்தில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி குறையும். இதற்கு மாற்றாக அமெரிக்காவில் வாழும் மக்கள் அந்த நாட்டில் உற்பத்தியாகும் டெக்ஸ்மதி, ஜாஸ்மதி அரிசிகளை பயன்படுத்துவார்கள். இதன்மூலம் அங்குள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்று டிரம்ப் நம்புகிறார்.

இதன் முதற்கட்டமாக சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க விவசாயிகளுக்காக குறிப்பாக அரிசி பயிரிடும் விவசாயிகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவி தொகுப்பை அறிவித்துள்ளார். இதனால் இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சிறிது காலத்தில் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் பாஸ்மதி அரிசிக்கு டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேவேளையில் டிரம்ப் அரிசியை குறிவைத்து இந்தியாவுக்கு வரி விதித்தாலும் நம் நாட்டுக்கு பாதிப்பு என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் நம் நாட்டின் மொத்த அரிசி ஏற்றறுமதியில் 3 சதவீதம் மட்டும் தான் அமெரிக்கா செல்கிறது. மாறாக நம் நாட்டில் இருந்து வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா நாடுகளுக்கு தான் அதிகப்படியான அரிசி செல்கிறது. இதனால் டிரம்ப் வரி விதித்தால் அது நம் நாட்டை பெரியளவில் பாதிக்காது. இருப்பினும் டிரம்பின் இந்த நடவடிக்கை என்பது ஏற்கனவே இருக்கும் இந்தியா - அமெரிக்கா உறவில் உள்ள விரிசலை இன்னும் அதிகப்படுத்தும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+