டிரம்ப் மீது மீண்டும் கொலை முயற்சி.. பாதுகாப்பு தருவதில் என்ன சிக்கல்! சீக்ரெட் சர்வீஸ் திணறுவது ஏன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ளது. டிரம்ப் மீது 3 மாதங்களில் நடக்கும் 2வது கொலை முயற்சி தாக்குதல் இதுவாகும். டிரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சி நடத்த என்ன காரணம்.. டிரம்பிற்கு பாதுகாப்பு தருவதில் என்ன பிரச்சினை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தச் சூழலில் டிரம்ப் மீது நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அவரை கொலை செய்யக் கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு: புளோரிடாவின் வெஸ்ட் பால்ம் பீச்சில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த போதிலும் தான் பாதுகாப்பாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் 58 வயதான வட கரோலினாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் எதற்காக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து சுமார் 450 மீட்டர் தொலைவில் ஏகே 47 மற்றும் டெலஸ்கோப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் தான் பென்சில்வேனியாவில் டிரம்ப்பை கொலை செய்த முயற்சி நடந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களைப் பாதுகாக்கும் சீக்ரெட் சர்வீஸ் குறித்து கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
கோல்ப் மைதானம்: அதேநேரம் டிரம்பின் இந்த கோல்ஃப் மைதானத்தில் பாதுகாப்பு தருவது என்பது நீண்ட காலமாகவே சிக்கலாகவே இருந்துள்ளதாக சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். அமெரிக்க அரசியல் தலைவர் விசிட் செய்யும் மிகப் பெரிய திறந்த வெளிப்புறப் பகுதியாக இந்த கோல்ப் மைதானம் இருக்கிறது.
இந்த கோல்ப் மைதானம் சாதாரண சாலைகளுடன் எந்தவொரு வேலி அல்லது தடுப்பு இல்லாமல் இணைகிறது. கோல்ப் மைதானத்திற்கு இடையே மரங்கள் சிறுகுன்றுகளும் உள்ளன. இவை கொலையாளிகள் பதுங்கும் இடமாக இருப்பதும் ஒரு சிக்கல். இந்த நபரும் கூட கோல்ப் மைதானத்தில் உள்ள சிறு புதர்களை வைத்தே இவ்வளவு அருகே வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சிக்கல் ஏன்: இதற்கு முன்பு வரை அதிபர்கள் அல்லது முன்னாள் அதிபர்கள் கோல்ப் மைதானத்திற்கு வந்தால் அந்த மைதானம் முழுமையாக மூடப்படும்.. அருகே இருக்கும் சாலைகளும் மூடப்படும். ஆனால், டிரம்ப் அடிக்கடி கோல்ப் விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் டிரம்பின் வாகனத்திற்கு முன்பும் பின்பும் மட்டும் செல்வார்கள். அவர் எங்கு விளையாடப் போகிறாரோ.. அந்த இடத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே சோதனை செய்வதே வழக்கமாக இருந்துள்ளது.
3 முக்கிய சாலைகள்: டிரம்ப் எப்போதும் கோல்ப் விளையாடும் இந்த கோல்ஃப் கிளப், மூன்று முக்கிய சாலைகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பாம் பீச் சர்வதேச விமான நிலையமும் அருகில் உள்ளது. இதனால் யார் கோல்ப் மைதானத்திற்குள் வருகிறார்கள்.. யார் வெளியே செல்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்கிறார்கள். இதுவே டிரம்பின் கோல்ப் மைதானத்தில் பாதுகாப்பு தருவதை சீக்ரெட் சர்வீஸுக்கு சிக்கலானதாக மாற்றுகிறது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications