பூமிக்கு இப்படியொரு தம்பியா.. மனிதர்கள் வாழக்கூடிய கிரகம்? நமது உலகை போலவே இருக்கிறதாம்! சூப்பர்
வாஷிங்டன்: பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட கிரகத்தைக் கண்டறியும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஆய்வாளர்கள் புதிய கிரகம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரபஞ்சம் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கும் என்ற கருத்தை பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். இங்கு ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிரகத்தில் நிச்சயம் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதே அவர்கள் கருத்து.
வேறு எந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் நாசா இது குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு உள்ளது.

ரேடியோ சிக்னல்: பூமியைப் போலவே இருக்கும் கிரகத்திற்கான தேடல் என்பது சூரியக் குடும்பம், கேலக்ஸிகளையும் தாண்டிவிட்டது. மனிதர்களின் பேராசை காரணமாகப் பூமியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், மக்கள் வாழும் மற்றொரு கிரகத்தைக் கண்டுபிடிப்பது ரொம்பவே முக்கியமானதாக மாறிவிட்டது. இதற்காக ஆய்வாளர்கள் பல கோடி தொலைவில் இருக்கும் கிரகங்களுக்கு ரேடியோ சிக்னல்களையும் அனுப்பி வருகிறார்கள். அங்கே எதாவது கிரகங்கள் இருந்தால் ரேடியோ சிக்னலுக்கு பதில் தரும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.
பூமி 2.0 ஐத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தொலைதூர கிரகம் ஒன்றில் இருந்து வரும் காந்த அலைகள் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. YZ Ceti b என்று அழைக்கப்படும் கிரகத்தில் இருந்து தான் சிக்னல்கள் வருகிறது. இது பூமியிலிருந்து வெறும் 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பாறைகளால் ஆன கிரகமாகும். ஒளியின் வேகத்தில் சென்றால் எத்தனை காலத்தில் அந்த இடத்தை அடையாளம் என்பதே ஒளி ஆண்டிற்கு அர்த்தம்.

எவ்வளவு தொலைவு: ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த YZ Ceti அடைய முடியும். ஒப்பீட்டளவில் இது அருகே இருக்கிறது என்றே சொல்லலாம். YZ Ceti கிரகத்தில் இருந்து மீண்டும் மீண்டும் ஒரு சிக்னல் வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எக்ஸோப்ளானெட்டின் காந்தப்புலத்திற்கும் நட்சத்திரத்திற்கும் இடையிலான தொடர்புகளால் உருவாக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமிக்கும் இந்த கிரகத்திற்கும் இடையே இத்தனை தொலைவு இருந்தாலும் கூட இந்த சிக்னல்கள் வலிமையாக உள்ளது ஆய்வாளர்களுக்கு உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர் ஜாக்கி வில்லட்சென் கூறுகையில், "இதுவரை யாரும் கண்டுபிடிக்காத ஒரு காரியம் இப்போது நடக்கிறது. ஆரம்ப சிக்னல்கலை பார்க்கும் போது அது அழகாகத் தெரிந்தது. அப்போது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் அதே சிக்னல்கள் வருவதே இப்போது சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.
ஏன் முக்கியம்: யு.எஸ். நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டேஷனுக்கு சொந்தமான கார்ல் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ஜ் அரே என்ற ரேடியோ டேலஸ்கோப் மூலம் இந்த சிக்னல்கள் கண்காணிக்கப்படுகிறது. அந்த கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதையே இது காட்டுவதாக அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த கிரகத்தின் காந்தப்புலம் வலுவாக உள்ளது. அது சுற்றும் நட்சத்திரத்தில் (நமக்குச் சூரியனைப் போல) இருந்து வரும் துகள்களில் இருந்து கிரகத்தை இந்த காந்த புலன் தான் பாதுகாக்கும். நமது பூமியைச் சுற்றிலும் இதேபோன்ற காந்தப்புலம் இருக்கிறது. அதுதான் சூரியினில் இருந்து வரும் ஆபத்தான கதிர்களைத் தடுத்து நிறுத்துகிறது.

இதேபோன்ற காந்த புலன் அங்கும் இருப்பதால் அதில் உயிரினங்கள் வாழும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதேநேரம் அந்த கிரகத்தின் காந்தப்புலம் எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பூமிக்கு இருப்பதைப் போல வலிமையான காந்தப்புலம் இருந்தால் மட்டுமே துகள்களில் இருந்து காக்க முடியும். காந்தப்புலம் கண்ணுக்குத் தெரியாது என்பதால், அந்த கிரகத்தில் எந்தளவுக்கு வலிமையான ஒன்று இருக்கிறது என்பதைக் கண்டறிவது சிரமமாகவே இருக்கிறது.
ரேடியோ சிக்னல்: இந்த YZ Ceti b அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது.. இதன் மூலம் இரண்டு நாட்களில் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வந்துவிடுதகிறது. YZ Ceti இன் பிளாஸ்மா காந்தப்புலத்துடன் தொடர்புகொள்வதால், அது பூமியில் காணக்கூடிய அளவுக்கு வலுவான ரேடியோ அலைகளை உருவாக்குகிறது.
YZ Ceti b மற்றும் அதன் நட்சத்திரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளும் ஒரு அரோராவை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமியைப் போல மற்றொரு கிரகத்தைக் கண்டறிய முயலும் ஆய்வாளர்கள் பூமிக்கு இணையான சைஸில் உள்ள கிரகங்களைத் தேடி வருகின்றனர். அதற்கு இந்த YZ Ceti b பதிலாக இருக்குமா என்பது சில காலத்தில் தெரிந்துவிடும்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications