அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சை.. ஆனால் அனைத்தையும் தாண்டி டிரம்ப் ஆதரவு அதிகரிப்பது ஏன்.. பரபர
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சிக்கான ரேஸில் இப்போது டிரம்பிற்கான ஆதரவு அதிகமாக இருக்கும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரு பிரதான கட்சிகள் இருக்கும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

அதேநேரம் குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களில் டிரம்பிற்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. டிரம்ப் எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கினாலும் டிரம்பிற்கான ஆதரவு குறையவே இல்லை.
காரணங்கள்: இதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கவே செய்கிறது. முதலில் டிரம்பின் டிரேட் மார்க் அமெரிக்கா ஃபர்ஸ்ட் பிரச்சாரம். உலகிலேயே மிகச் சிறந்த நாடு அமெரிக்கா.. எனவே, அமெரிக்கா தான் உலக நாடுகளை வழிநடத்த முடியும் என்ற தொனியில் தான் டிரம்ப் பிரச்சாரம் செய்வார். நாட்டுப்பற்று அதிகம் இருக்கும் அமெரிக்கர்கள் மத்தியில் இது ரொம்பவே ஈஸியாக ஒர்க் அவுட் ஆகும்.
அடுத்து பழமைவாதிகளின் ஆதரவு எப்போதும் அவருக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. பொதுவாக குடியரசு கட்சியில் பழமைவாதிகள் அதிகம் இருக்கும் நிலையில், அவர்கள் டிரம்பால் ஈர்க்கப்படுகிறார்கள். குறிப்பாகப் புலம்பெயர்வைத் தடுக்க கடுமையான சட்டங்கள், மெக்சோ மக்கள் மீதான வெறுப்பு, குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பயங்கரவாதத்துடன் இணைத்துப் பேசுவது ஆகியவற்றுக்கு கண்டனம் கடுமையாக இருந்தாலும், அது பழமைவாதிகளை டிரம்ப் ஆதரவாளர்களாக மாற்றுகிறது.
அமெரிக்கா: இடையில் சில வழக்குகளில் டிரம்ப் கைதாகி இருந்தார். அவர் மீது விசாரணையும் கூட நீதிமன்றங்களில் நடக்கிறது. ஆனால், அதையே டிரம்ப் தனக்கு ஆதரவாக மாற்றுகிறார். அதாவது அமெரிக்கா மீண்டும் முதன்மையான இடத்திற்குச் செல்லக் கூடாது என்று சிலர் விரும்புவதாகவும் அவர்களே திட்டமிட்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்வதாகவும் விமர்சித்தார். இதுவும் பிரச்சாரத்தில் நல்ல வேலை செய்தது. இது தவிர வெள்ளை இன மக்கள் ஆதரவு டிரம்பிற்கு எப்போதும் இருக்கும்.
அமெரிக்கப் பொருளாதார நிலை அந்நாட்டு மக்களை அதிருப்தியில் தள்ளுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கே வேலைவாய்ப்பின்மை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதாகவும் பைடன் தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், பொதுமக்களுக்கு விலைவாசி உயர்வே மிகப் பெரிய சிக்கலாகத் தெரிகிறது. இதனால் வட்டி விகிதம் அதிகரிக்கும் நிலையில், மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
வெள்ளை இன மக்கள்: அமெரிக்காவில் இப்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து குடியேறுகின்றனர். இதனால் கலாச்சார ரீதியாகப் பல தரப்பு மக்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். ஆனால், டிரம்ப் அமெரிக்க மண் மீதான உரிமையை அமெரிக்கர்கள் இழப்பார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதாவது வெள்ளை இன மக்களை மட்டுமே அவர் அமெரிக்கர்கள் என்று குறிப்பிடுகிறார். வெள்ளை இன மக்கள் ஆதிக்கம் குறைவதை அவர் பெரிய பிரச்சினையாக முன்னெடுக்கிறார். இதுவே வெள்ளை இன மக்களிடையே அவரது ஆதரவை அதிகரிக்கிறது.
குடியரசு கட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பல வேட்பாளர்கள் இதே பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும் கூட டிரம்ப் அளவுக்கு யாரும் இதைத் தீவிரமாகப் பேசுவதில்லை. குறிப்பாக பைடனை அவர் மிகக் கடுமையாகத் தாக்கி பேசுகிறார். இவை எல்லாம் சேர்ந்து தான் டிரம்பிற்கான ஆதரவை எகிற வைத்துள்ளது.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications