ஜி ஜின்பிங் ஒரு "சர்வாதிகாரி.." மீட்டிங் முடிந்த உடனேயே பைடன் சொன்ன அந்த ஒரு வார்த்தை..அடுத்து என்ன

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பைடன்- ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடந்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிரம்ப் காலத்தில் இந்த மோதல் உச்சத்திற்குச் சென்றது. அதன் பிறகு பைடன் வந்த பிறகு மோதல் குறைந்தாலும் நல்லுறவு ஏற்படவில்லை.

 Why US President Biden Calls Xi Jinping as Dictator Hours After First Meeting

அதிலும் கடந்தாண்டு அமெரிக்கா நிலப்பரப்பிற்கு மேல் சீனாவின் பலூன் ஒன்று பறந்ததும் சர்ச்சையானது. அதன் பிறகு இரு தரப்பிற்கும் இடையே பெரியளவில் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாமல் இருந்தது.

சீன அதிபர்: இந்தச் சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கே சான் பிரான்சிஸ்கோ நகரில் முக்கிய தொழிலதிபர்களுடன் பிஸ்னஸ் டின்னரிலும் ஜி ஜின்பிங் கலந்து கொள்கிறார். அமெரிக்கா சீனா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்த பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகம் தொடங்கிப் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். கடந்த ஓராண்டாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி நிலையில், இந்த சந்திப்பு நிலைமையை நார்மலாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

​​​​முக்கிய பொறுப்பு: அமெரிக்கா-சீனா உறவை உலகின் மிக முக்கியமான இருதரப்பு உறவு என்று குறிப்பிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், தானும் பைடனும் உலகிற்கும் மற்றும் வரலாற்றிற்கும் மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய பைடன், சீனாவை அடங்கவோ கட்டுப்படுத்தவோ அமெரிக்கா முயலவில்லை என்று தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவினாலும் அது மோதலாக மாறக் கூடாது என்றார். அப்போது குறிப்பிட்ட ஜி ஜின்பிங், "சீனா மற்றும் அமெரிக்கா போன்ற இரண்டு பெரிய நாடுகளுக்கு, ஒருவரையொருவர் நிச்சயம் முறைத்துக் கொண்டு இருக்க முடியாது. அதற்கான வழியே இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

ஆலோசனை: கலிபோர்னியாவில் நடந்த இந்தச் சந்திப்பில் இரு தரப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் உரையாடியதாகக் கூறப்பட்டது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆலோசனைக் கூட்டம் வெளிப்படையாக இயல்வாகவும் இருந்தது. பைடன் நேரடியாகத் தனது கருத்துக்களையும் கவலைகளையும் சீன அதிபரிடம் தெரிவிக்க முடிந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அதற்குப் பதிலளித்தார்" என்றார்.

இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் ​​இருதரப்பு உறவுகளைத் தாண்டி பல சர்வதேச நிகழ்வுகள் குறித்தும் விவாதித்துள்ளனர், ஈரான், மத்திய கிழக்கு, உக்ரைன், தைவான், இந்தோ-பசிபிக், பொருளாதார பிரச்சனைகள், செயற்கை நுண்ணறிவு, மருந்துகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் விவாதித்துள்ளனர். இந்த மீட்டிங்கை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சீனா ஒப்புக்கொண்டதாக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

சர்வாதிகாரி: இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செய்தியாளர்களிடம் பேசிய பைடன், "அவர் ஒரு சர்வாதிகாரி, அவர் ஒரு கம்யூனிச நாட்டை வழி நடத்துபவர். நம்மிடம் இருக்கும் அரசை விட முற்றிலும் மாறுபட்ட அரசை அடிப்படையாகக் கொண்டது. அதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று பைடன் கூறினார். இரு தரப்பிற்கும் இடையேயான சந்திப்பு சுமுகமான போன போதிலும், ஜி ஜின்பிங்கை பைடன் சர்வாதிகாரி எனக் குறிப்பிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு நிச்சயம் சீனா பதிலடி கொடுக்கும் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+