திரும்பிய பக்கமெல்லாம் செத்து மடியும் பறவைகள்.. வரலாற்றிலேயே மோசமானது.. அடுத்த பெருந்தொற்றா? பகீர்
உலகெங்கும் அதிகரிக்கும் பறவை காய்ச்சல் ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: இப்போது வரலாற்றில் மிகப்பெரிய பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், எங்கு அது மனிதர்களுக்கும் பரவி அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்துமோ என்று ஆய்வாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இது உலக நாடுகளை வைத்துச் செய்துவிட்டது. உலக வல்லரசுகள் தொடங்கி அனைத்து நாடுகளும் இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
கொரோனா வேக்சின் பணிகள், கடுமையான கட்டுப்பாடுகள் என இப்போது தான் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு.. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம். இன்னும் கொரோனா முற்றிலுமாக ஒழியவில்லை என்றாலும் கூட, அதன் பாதிப்பு இப்போது பெரியளவில் இல்லை.

பறவை காய்ச்சல்
உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இப்போது மற்றொரு பெருந்தொற்று ஏற்படுமோ என்ற கவலை ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் பறவை காய்ச்சல்.. பல நாடுகளில் இப்போது பறவை காய்ச்சல் புதிய தலைவலியாக மாறிவிட்டது. ஜப்பானில் மட்டும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. இது மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

ஆபத்தா
இது தொடர்பாக கார்னெல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் ஜெய் வர்மா கூறுகையில், "பறவைக் காய்ச்சலினால் இப்போது நடப்பதைப் பார்த்தால் கவலையாக உள்ளது. வரும் காலத்தில், பறவை காய்ச்சல் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளது" என்றார். பறவைக் காய்ச்சல் என்பது புதிய வகை வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை.. 1990களின் பிற்பகுதியில் இருந்து பறவைக் காய்ச்சல் குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது.

எப்படி பரவியது
இப்போது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா A (H5N1) 2.3.4.4b என்ற வகையே உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வகை முதலில் 2020இல் தோன்றி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த பறவைகள் வழியாகப் பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வகை வைரஸ் 2021இல் அமெரிக்காவுக்குள் பரவியுள்ளது. இந்த வகை பறவை காய்ச்சல் வைரஸ் எல்லா வகை பறவை இனங்களுக்கு மத்தியிலும் எளிதாகப் பரவுகிறது. மேலும், அவற்றை எளிதாகக் கொல்லும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது.

மோசமான பாதிப்பு
அமெரிக்காவில் மட்டும் இப்போது 47 மாகாணங்களில் சுமார் 5.8 கோடிக்கும் அதிகமான கோழிகளுக்கு இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல ஆயிரம் கோழிகள் வைத்து வளர்க்கப்படுவதால்.. மிக ஈஸியாக அவை பரவிவிடுகிறது. இது மட்டுமில்லாமல் காடுகளில் வாழும் பறவைகளில் 6,200 பறவைகளுக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்தனை காலத்தில் இப்போது இந்த பறவை காய்ச்சல் ஏன் திடீரென வேகமாகப் பரவுகிறது என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை. இது தொடர்பாகவும் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மனிதர்களுக்குப் பரவுமா
பறவைகள் மட்டுமின்றி.. நரிகள், ரக்கூன்கள், கரடிகள், மலை சிங்கங்கள் மற்றும் டால்பின்களிடமும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன. சரி இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம்.. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுமா என்றால் பரவும்.. இதற்கு முன்னரும் பரவியுள்ளது. 1990களில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சுாமர் 850 பேருக்கு இந்த பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இருப்பினும், அது அரிதிலும் அரிதாக ஏற்படும் சம்பவம் என்பதால் அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எந்தளவுக்கு ஆபத்து
பறவைகளின் எச்சில், கழிவு, நாசி சுரப்பு மூலம் இது மனிதர்களுக்குப் பரவும்.. மேலும், மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல் ஏற்பட்டால்.. இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கும்.. மேலும், தற்போதைய சூழலில் இது மனிதர்கள் மத்தியில் எந்தளவுக்கு வேகமாகப் பரவும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த காலத்தில் இது மனிதர்களுக்குப் பரவிய போது, 50 நோயாளிகள் இறந்துவிட்டனர். கொரோனாவை விட இதற்கு டெத் ரேட் அதிகமாக உள்ளது. இருப்பினும், இது மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து மிகக் குறைவு என்பதால் அச்சப்படத் தேவையில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications