புதின் எடுத்த அதே முடிவு.. அதிபராக இனி தொடர்ந்து நீடிக்கும் டிரம்ப்? பிள்ளையார் சுழி போட்டாச்சே
வாஷிங்டன்: அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக முடியும். இந்நிலையில் தான் 3வது முறையாக அதிபராகும் நோக்கத்தில் டொனால்ட் டிரம்ப் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ரஷ்யாவில் தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிக்க புதின் கொண்டு வந்த மாற்றத்தை டொனால்ட் டிரம்பும் செய்யலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இதையடுத்து கடந்த 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார். துணை அதிபராக ஜேடி வான்ஸ் பொறுப்பேற்றார். இந்த விழாவில் நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அதேபோல் பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப அதிபரானதுமே அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது. அதேபோல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு விற்பனைக்கு வரும் பொருட்களில் கனடா, மெக்சிகோ உள்பட பிற நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி எல்லையில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு சட்டவிரோத என்ட்ரி தடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதேபோல் முந்தைய ஜோ பைடன் அரசில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து செய்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன் அடுத்தக்கட்டமாக தான் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில் முக்கிய திருத்தம் கொண்டு வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக பொறுப்பு வகிக்க முடியும். 3வது முறையாக அதிபராக பொறுப்பு வகிக்க முடியாது. இது அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா உள்ளிட்டவர்கள் 2 முறை தொடர்ந்து பதவி வகித்துவிட்டு 3வது முறையாக தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே 2016 அதிபர் தேர்தலில் வென்ற பிறகு 2017 ஜனவரி மாதம் முதல் 2021 ஜனவரி மாதம் வரை 4 ஆண்டுகள் அதிபராக செயல்பட்டார்.
இப்போது 2வது முறையாக மீண்டும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் 2029ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அதிபராக செயல்படுவார். அதன்பிறகு டொனால்ட் டிரம்பால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஒருவேளை 3வது முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் கட்சியை சேர்ந்த எம்பி ஆண்டி ஓகிள்ஸ் இதனை மாற்றம் செய்ய விரும்புகிறார். அதோடு டொனால்ட் டிரம்பை 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்கான அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை அவர் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்துள்ளது. அப்போது அவர் பேசுகையில், ‛‛நம் நாட்டின் சீரழிவை மாற்றி அமெரிக்காவை மீண்டும் பலமிக்க நாடாக மாற்றும் தலைவர் நான் தான் என்று டொனால்ட் டிரம்ப் நிரூபித்துள்ளார். இந்த இலக்கை அடைய அவருக்கு போதிய காலஅவகாசத்தை வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த திருத்த மசோதாவில், அமெரிக்காவில் தற்போது ஒருவர் 2 முறை அதிபராக தேர்வு செய்யப்படலாம் என்ற நடைமுறை உள்ளது. இதனை 3 முறை என்று அதிகரிக்க வேண்டும். ஆனாலும் கூட ஒருவர் 2 முறை தொடர்ந்து அதிபரானால் அவரால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. மாறாக ஒருமுறை அதிபராக இருந்த பிறகு அடுத்த தேர்தலில் தோற்று, அதற்கு அடுத்த தேர்தலில் ஒருவர் 2வது முறையாக வென்றால் அவரால் 3வது முறையாக அதிபர் தேர்தலில் களமிறங்க முடியும். ஆனாலும் 3 முறை அதிபராக இருந்தால் மீண்டும் போட்டியிட முடியாது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சியில் ஒருவர் அதிபராக 2 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு விட்டால் அவரால் 2 முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சாராம்சங்களை கொண்டுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை 1957 ம் ஆண்டில் அமெரிக்காவின் 22வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் என்பது ஒருவரை 2 முறைக்கு மேல் அதிபராக பதவி வகிப்பதை தடுக்கிறது. தற்போது டொனால்ட் டிரம்ப் 3வது முறையாக அதிபராக வேண்டும் என்றால் இந்த பிரிவில் தான் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். இதனால் தான் அவரது கட்சி எம்பி 22வது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் இதுவரை ஒருவர் மட்டுமே 2 முறைக்கு மேல் அதிபராகி உள்ளார். அவரது பெயர் பிராங்கிளின் ரோஷ்வெல்ட். இவர் 4 முறை அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்துள்ளார். ஆனால் அவரது காலத்தில் இந்த நடைமுறை என்பது இல்லை.
இதற்கிடையே தான் டிரம்ப் ஆதரவாளின் இந்த மசோதா என்பது வெற்றி பெற வாய்ப்பு இல்லை. ஏனென்றால் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் டொனால்ட் டிரம்ப் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட அரசியலமைப்பு சட்டதிருத்தம் மேற்கொள்ள தேவையான உறுப்பினர்கள் இல்லை. சபையில் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டதிருத்தம் கொண்டு வர முடியும். ஆனால் தற்போது டொனால்ட் டிரம்ப் கட்சிக்கு அப்படியான நிலை இல்லை. அதேபோல் 38 மாகாணங்களில் இதற்கு ஒப்புதல் வேண்டும். அப்படி பார்த்தால் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 22 இடங்கள் மட்டுமே குடியரசு கட்சி வசம் உள்ளது.இதனால் இது நிறைவேற வாய்ப்பில்லை.
இருப்பினும் இந்த விவகாரம் ஒரு செய்தியை மட்டும் தெளிவாக காட்டுகிறது. டொனால்ட் டிரம்பை திருப்பதிப்படுத்துவதற்காக அவரது கட்சியினர் எந்த எல்லைக்கு செல்வார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் டொனால்ட் டிரம்பும் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பதவியில் நீடிக்க விரும்புவதை பலமுறை வெளிப்படுத்தி உள்ளார். 2020ம் ஆண்டில் நடந்த கூட்டத்தில் டொனல்ட் டிரம்ப், ‛‛அதிபர் தேர்தலில் மீண்டும் வென்று 4 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பேன். அதன்பிறகு நம் ஆட்சியை பார்த்து மீண்டும் 4 ஆண்டு அதிபர் பதவியை ஏற்கும் உரிமையை நான் பெறலாம்''என்று கூறியிருந்தார். இதன்மூலம் 2 முறை மட்டும் அல்லது கூடுதல் ஆண்டுகள் அதிபராக வழிவகுக்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதுபற்றி அமெரிக்காவின் சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஹாமில்டன் அரசு கல்லூரியின் பேராசிரியர் பிலிப் கிளிங்னர் கூறுகையில், ‛‛மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் அவர் தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள விரும்புவார். இதற்காக அவர் துணை அதிபராக கூட மாறுவார் ஜேடி வான்ஸ் அல்லது வேறு ஒருவரை அதிபராக்கி அதிகாரத்தை தன் கையில் வைத்து கொள்ள டிரம்ப் நினைக்கலாம்.
இது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கையாண்ட யுக்தியாகும். 2 முறை அதிபராக பதவி வகித்த புதின் அதன்பிறகு பிரதமரானார். பிறகு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று இப்போது தொடர்ந்து அதிபராக நீடித்து வருகிறார். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். டிரம்பும், புதினும் நீண்டகால நண்பர்கள். இதனால் புதினின் யுக்தியை டிரம்ப் கையில் எடுத்து ஏவாத ஒரு வழியில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரலாம். ஒருவேளை இது நடக்காத பட்சத்தில் டிரம்ப் தனது குடும்பத்தில் ஒருவரை அதிபர் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கலாம். அதன்பிறகு அவர்களை பொம்மையைாக பதவியில் வைத்து பின்னால் இருந்து டிரம்ப் இயக்கலாம் என்று கூறியுள்ளார்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ











Click it and Unblock the Notifications