தப்பான பட்டனை அழுத்திய பெண்.. லாட்டரியில் விழுந்த ரூ.8 கோடி.. இவர் தான் அதிர்ஷ்ட தேவதை போல..!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக வாங்கிய லாட்டரியில் அவருக்கு ரூ.8 கோடி ஜாக்பாட் கிடைத்துள்ளது

பொதுவாக அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது கிடைக்கும் என யாருக்குமே தெரியாது. இப்படி அடிக்கும் அதிர்ஷ்டம் ஒருவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடும்.

Woman won Rs 8 Crore even after pressing Wrong Button on Lottery Machine

இதுதான் அதிர்ஷ்டம் : அப்படியொரு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவது போன்ற ஜாக்பாட் தான் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது. அந்த பெண் லாட்டரி விற்பனை இயந்திரத்தில் தவறுதலாகப் பட்டனை அழுத்தி இருக்கிறார். அதாவது அந்த பெண் அழுத்த நினைத்த பட்டன் வேறு.. ஆனால் தெரியாமல் அவர் வேறு பட்டனை அழுத்திவிட்டார். இப்படி தவறாக அவர் வாங்கிய லாட்டரிக்கு இந்திய மதிப்பில் ரூ.8 கோடி கிடைத்துள்ளது.

மிரியம் லாங் என்ற பெண்ணுக்குத் தான் இப்படி மிக மோசமான சம்பவம் நடந்தது. தனது வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்ற அந்த பெண் அப்படியே லாட்டரி பக்கம் திரும்பி இருக்கிறார். ஆனால், அவர் அப்போது ஒரு மில்லியன் டாலரை வெல்வார் எனத் துளியும் நினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.

என்ன நடந்தது: அவ்வளவு ஏன் கிறிஸ்டியன்ஸ்பர்க்கில் வசிக்கும் அந்த பெண் வாங்க நினைத்ததே வேறு ஒரு லாட்டரியை தான். அதாவது அந்த பெண் மெகா மில்லியன் டிக்கெட்டை வாங்கவே முயன்றுள்ளார். ஆனால் தவறுதலாக அவர் வேறு ஒரு பட்டனை அழுத்தவே அவருக்கு பவர்பால் லாட்டரிக்கான டிக்கெட் கிடைத்துள்ளது. இப்படித் தெரியாமல் வாங்கிய டிக்கெட்டில் தான் கோடிகள் கொட்டப் போகிறது என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.

தவறான லாட்டரியை வாங்கிவிட்டோமே என்ற சோகத்தில் அந்த பெண் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், இந்த பெண் வாங்கிய லாட்டரியின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது இவருக்கு இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் இவர் வாங்கிய லாட்டரியின் முதல் ஐந்து எண்கள் மெகா லாட்டரியுடன் மேட்ச் ஆகி இருக்கிறது. இதன் மூலம் அவருக்கு $1 மில்லியன் டாலர், அதாவது ரூ. 8.33 கோடி கிடைத்துள்ளது.

தலையே சுத்துது: இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், "நான் எனது வாழ்க்கையில் செய்த மிகவும் பெஸ்ட்டான தவறு என்றால் அது இதுதான்.. இந்த தொகையை வைத்து என்ன செய்யலாம் என இப்போதைக்கு எந்தவொரு திட்டத்தையும் போடவில்லை. எனக்குக் கிடைத்த தொகை மிகப் பெரியது. அதைக் கேட்டவுடன் முதலில் நம்பவே முடியவில்லை. இதயத் துடிப்பு எகிறி.. லேசாகத் தலையே சுத்தி விட்டது" என்றார்.

அவருக்கு மட்டுமில்லை... இந்த செய்தி படித்து ஒட்டுமொத்த நெட்டிசன்களுக்கும் தலையே சுற்றிவிட்டது. எப்படி இந்த பெண்ணுக்கு மட்டும் தவறாக வாங்கிய லாட்டரியில் இப்படி அதிர்ஷ்டம் கொட்டுதே என்று அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்:

லாட்டரி ரூல்ஸில் இருந்த தப்பு.. ரூ.200 கோடியை அள்ளிய 80 வயது தம்பதி

அமெரிக்காவின் வயதான தம்பதி ஒருவர் லாட்டரி ரூல்ஸில் இருந்த சிறிய தவறை பயன்படுத்தி ₹ 200 கோடியை அப்படியே அள்ளியுள்ளார்கள். இந்த தவறை அதன் பின்னரே லாட்டரி நிறுவனம் உணர்ந்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் இந்தியருக்கு அடித்த லக்! ரூ. 44 கோடி பரிசு

ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் அங்கே லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளார். அதில் அவருக்கு ரூ. 44 கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது.

1994ல் ரூ.500க்கு வாங்கிய எஸ்பிஐ பங்கு.. இப்போது 750 மடங்கு லாபம்

தாத்தா ஒருவர் 1994ஆம் ஆண்டு எஸ்பிஐ பங்குகளை வாங்கி இருக்கிறார். அவர் அப்படியே அதை மறந்துவிடவே... இப்போது அவரது பேரன் இந்த பங்குகளை கண்டுபிடித்துள்ளார். அன்று வெறும் ரூ.500 கொடுத்து வாங்கிய அந்த பங்குகள் மூலம் அவருக்கு 750 மடங்கு லாபம் கிடைத்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+