சொர்க்கமே என்றாலும்.. அமெரிக்கா போக மாட்டேன்.. கூகுள் என்ஜினீயர் சொல்லும் காரணம் தான் அல்டிமேட்
வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர், தான் அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆக மாட்டேன் என்றும் இந்தியாதான் தனக்கு அதிகம் பிடித்துள்து எனவும் கூறி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
படித்து முடித்ததும் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிடனும்பா.. என ஐடி ஊழியர்களும் நினைப்பதுண்டு... அதிலும் அமெரிக்காவின் சிலிக்கான் வால்லியில் குவிந்து கிடக்கும் ஐடி நிறுவனங்களை குறிவைத்தே பல இந்திய இளைஞர்கள் வேலையை பெற்றுக்கொண்டு அங்கேயே குடியேறியும் விடுகிறார்கள். கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களே வேலை பார்க்கிறார்கள்.

பலரும் பெரும் லட்சிய கனவாக வெளிநாட்டு வாழ்க்கையையும் அங்குள்ள லைப் ஸ்டைலையும் விரும்பும் நிலையில், பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயரான ஆன்ஷுல் சதாரியா, கூகுளில் வேலை பார்த்த போதும் அமெரிக்காவுக்கு போய் வேலை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். தன்னிடம் வேலை பார்த்த பலரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட போதும் நான் ஏன் போகவில்லை என பலரும் கேள்வி கேட்பதாகவும் கூறியிருக்கும் அன்ஷூல் சதாரியா, ஏன் போகவில்லை என்பதற்கான தனது பதிலையும் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
அவர் பகிர்ந்த இந்த பதிவு தான் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அன்ஷூல் சதாரியா தனது பதிவில் கூறியிருப்பதாவது:- வரும் காலத்தில் எப்போதாவது உங்கள் குடும்பத்துடன் அமெரிக்கா செல்வீர்களா? என்று கேட்கிறார்கள்? அமெரிக்க வேலை கலாசாரம் மற்றும் பயண விரும்பி என்பதால் ஒருவேளை சில ஆண்டுகள் போகலாம். ஆனால் இறுதியில் இந்தியாவில் மட்டுமே நான் செட்டில் ஆவேன்.
"Bhaiya, why did you not go to the US? Didn't you get an opportunity?"
— Aanshul Sadaria (@AanshulSadaria) August 18, 2023
From Google, a lot of folks from my batch left for US. I could as well. But I didn't!
Patriotism?
Not exactly.
I lost my father in 2021 and wanted to stay close to my family! ❤️
ஆனால் பலரும் இதையே சொல்கிறார்கள். ஆனால் திரும்பி வருவது இல்லை. இது கொஞ்சம் உண்மைதான் என்றாலும், நான் இது குறித்து அதிகம் சொல்லப்போவது இல்லை. ஏனெனில் நான் அதை செய்ய போவது இல்லை. இந்தியாவில் வாழ்க்கை தரம் மிகவும் சிறந்ததாக இருக்கும் என்றே நான் அனுமானிக்கிறேன்,. ஏனெனில் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும். எளிதாக இங்கு உதவி கிடைக்கும்.
அதுமட்டும் இன்றி தனியார் கல்வி மலிவானது. அரசு கல்வி அங்கு சிறப்பாக உள்ளது. மருத்துவம் இங்கு மலிவாக உள்ளது. நான் சொன்னது போல ஐரோப்பாவில் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால், இந்தியாவுக்கு வரவே விரும்புகிறேன். ஏனெனில் இந்தியாவில் நான் அனைத்தையும் விரும்புகிறேன். இது தேசபக்தியின் மற்றொரு வரைமுறை என நினைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications