உலகளவில் 15 கோடியை தாண்டியது கொரோனா.. தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம்
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பு 15 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தியாவில் 379,459 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,647 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 77,266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,019 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா ஜெட் வேகம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா தொடர்ந்து போட்டு தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 150,208,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பு 15 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 3,163,373 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 128,257,979 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா நிலை என்ன?
அமெரிக்காவில் கொரோனா முன்பை விட குறைந்து வருகிறது. அங்கு 56,572 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 954 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக வருகிறது. அங்கு ஒரே நாளில் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,019 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்தியா ஆதிக்கம்
இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 379,459 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,647 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,085,008 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை 18,368,096 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 204,812 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 2,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.

துருக்கியில் அதிகம்
பிரான்சில் 31,539 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 315 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 13,385 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 344 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 7,848 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவால் 387 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,696 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 320 பேர் உயிரிழந்துள்ளனர்.துருக்கியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 40,444 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 341 பேர் பலியாகியுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications