Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hulk Hogan: WWE உலகின் முடிசூடா மன்னன்.. மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார் ! ரசிகர்கள் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: WWE எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியின் முடிசூடா மன்னனாக அறியப்பட்ட ஹல்க் ஹோகன் (Hulk Hogan) இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 71. ஹல்க் ஹோகனின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மரணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குதிரை லாடம் போன்ற மீசைதான் அவருடைய அடையாளம். வசீகரமான தோற்றத்துடன், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உடையணிந்து அவர் ரிங்குக்குள் வரும்போது அவரை மொத்த பார்வையாளர்களும் வரவேற்பார்கள்.

WWE US

வயதான அவர் நீண்ட காலமாக பொதுவெளியில் வராமல் இருந்து வந்தார். அவரது இதயம் பலவீனமாக இருந்ததாகவும் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவர் கோமாவுக்கு சென்றுவிட்டதாகவும் பேச்சு அடிப்பட்டது. ஆனால், அதையெல்லாம் அவரது மனைவி மறுத்தார். இந்நிலையில் தற்போது ஹோகன் உயிரிழந்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்னர் ஹோகன் இதய அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார் என்றும், கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார் எனவும் us weekly அறிக்கையை வெளியிட்டிருந்தது. ஹோகின் நட்பு வட்டாரமும் இந்த அறுவை சிகிச்சை விஷயத்தையும், ஹோகன் குணமடைந்து வருவதையும் உறுதி செய்திருந்தது. இப்படி இருக்கையில் திடீரென ஹோகன் மறைந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மரணத்திற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஹோகனை ஸ்டச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்சில் ஏற்றியதை அவரது அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்திருக்கின்றனர்.

டெர்ரி போலியா என்பதுதான் ஹோகனின் உண்மையான பெயர். தொழில்முறை மல்யுத்த போட்டியில் இவர் நுழைந்த நிலையில் தனது பெயரை ஹல்க் ஹோகன் என்று மாற்றிக்கொண்டார். 80களிலும், 90களிலும் இவர் பிரபலமான மல்யுத்த வீரராக அறியப்பட்டிருந்தார். குறிப்பாக இவருக்காக 'ஹல்மேனியா' எனும் இயக்கமே உருவாகியிருந்தது. ரசிகர்களிடம் இவர் நேரடியாக பேசினார். எந்தவித அலட்டலும் இல்லாமல் இவர் ரசிகர்களை அனுகிய விதம், இவரை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்தது.

WWE போட்டிகளில் இவர் விளையாடும் விதமும் சிறப்பானதாக இருக்கும். அதாவது, இவர் நம்மூர் சினிமா ஹீரோக்களை போல, முதலில் அடியை வாங்கிக்கொண்டு பின்னர் திருப்பி அடிப்பார். அதுவும் இவர் ஆட்டத்தின் முடிவில் இவர் நன்றாக அடி வாங்கிவிட்டு, பின்னர் எதிரியை பார்த்தது விரலை நீட்டி பின்னர் திருப்பி அடிப்பதும், லெக் டிராப் எனப்படும் முறையை பயன்படுத்தி எதிரியை வீழ்த்துவதும் இவரது விளையாட்டின் அடையாளமாக இருந்தது.

கடந்த 1987ம் ஆண்டு நடந்த ஆண்ட்ரே தி ஜெயன்ட்டுடனான ஹல்க் ஹோகனின் போட்டி மிகப்பெரிய சாதனையாக இன்று வரை பேசப்படுகிறது. காரணம் ஆண்ட்ரே 7.4 அடி உயரமும் சுமார் 250 கிலோ அளவுக்கு எடை கொண்டவராகவும் இருந்தார். மல்யுத்த உலகில் அதற்கு முன்னர் 10 ஆண்டுகளாக இவர் யாரிடமும் தோற்கப்படாதவராகவும் இருந்தார். இவருக்கும் அப்போதைய மல்யுத்த சாம்பியனான ஹல்க் ஹோகனுக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியை காண ஏறத்தாழ 1 லட்சம் பேர் கூடியிருந்தனர்.

போட்டியின் இறுதியில் ஹல்க் ஹோகன் வென்றார். ஆண்ட்ரே தி ஜெயன்ட்டை தூக்கி எறிந்தார். இந்த போட்டி ஹல்க் ஹோகனின் ரசிகர்களால் இன்றைக்கும் மறக்க முடியாததாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+