WWE இன் பிதாமகன்.. திடீர் ஓய்வுபெற்ற வின்ஸ் மெக்மோகன் - 90ஸ் கிட்ஸின் வெறுப்பை சம்பாதித்த இவர் யார்?
வாஷிங்டன்: WWE எனப்படும் மல்யுத்த போட்டியை நிறுவி உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற அதன் தலைவர் வின்ஸ் மெக்மோகன் ஓய்வுபெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
தொழில்முறை மல்யுத்தத்தில் பல்வேறு புதுமைகளையும் திரைக்கதைகளையும் புகுத்தி அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்களை என அனைத்து தரப்பினரையும் தன்வசம் ஈர்த்தது WWE.
தொடக்கத்தில் WWF என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் WWE என்று மாற்றப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வின்ஸ் மெக்மோகன்
அண்டர் டேக்கர், ஹல்க் ஹோகன், கேன், ட்ரிபிள் எச், ஜான் சீனா, மார்க் ஹென்ரி, ராக், ஸ்டோன் கோல்டு, ரெய் மிஸ்டீரியோ, பிக் ஷோ, பாபி லாஷ்லி, சிஎம் பங்க், ரோமன் ரெயின்ஸ், பூக்கர் டி, செத் ராலின்ஸ் என தலைமுறைக்கு ஏற்ப WWE இல் தங்களுக்கு விருப்பமான நாயகர்கள் இருக்கலாம். ஆனால், இவர்கள் அனைவரையும் இந்த நிலைக்கு உயர்த்தியவர் அதன் தலைவர் வின்ஸ் மெக்மோகன்.

வெற்றியின் ரகசியம்
உலகளவில் பல மல்யுத்த போட்டிகள் நடத்தப்பட்டாலும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி WWE இமாலய வெற்றியை பெற்றதற்கு காரணம் அதை சினிமா, சீரியலை போல் திரைக்கதை அமைத்து மெய்யுடன் கதையையும் புகுத்தியதுதான். WWE எல்லாம் பொய், யாரும் பார்க்காதீர்கள் என்று பலரும் கூறினாலும் அதன் ரசிகர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. காரணம் அதில் சொல்லி வைத்து விளையாடினாலும் அதை ஒரு சீரியல் போல் விறுவிறுப்பாக கொண்டு சென்றதுதான்.

உலகம் முழுவதும் பிரபலம்
இந்த யோசனையை கொண்டு வந்தவர் வின்ஸ் மெக் மோகன். அமெரிக்காவில் சிறிய சிறிய மல்யுத்த நிறுவனங்கள் இயங்கி வந்தபோது, வின்ஸ் மெக்மோகன் உலகம் முழுக்க தனது வியாபாரத்தை கொண்டு செல்வதற்காக பல நிறுவனங்களில் பணிபுரிந்த வீரர்களை நல்ல ஊதியத்தில் பணி அமர்த்தினார். ரிக் ப்ளேர், ஹல்க் ஹோகன் போன்ற வீரர்கள் இப்படிதான் WWE இல் வந்தனர். வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களையும் இவர் சேர்த்துக்கொண்டதால் இது உலகம் முழுக்க பரவியது.

வில்லன் அவதாரம்
இதுபோதாதென்று அமெரிக்காவின் கேபிள் டிவி மார்க்கெட்டையும் வின்ஸ் மெக்மோகன் கைப்பற்றியதால் முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இது வளர்ந்தது. பெரும்பாலும் வின்ஸ் மெக்மோகன் WWE இல் தன்னை வில்லனாகவே காட்டிக்கொள்வார். மக்கள் விரும்பும் வீரர்களுக்கு துரோகம் செய்வது, ஆட்களை வைத்து தாக்குவது போன்றே இவரது கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

WWE இல் டொனால்டு டிரம்ப்
இதனை உண்மை என்று நம்பி பார்க்கும் சிறுவர்கள், இளைஞர்கள் பலர் மெக்மோகனை உண்மையான வில்லன் என்றே பார்க்கின்றனர். பல நேரங்களில் வடிவேலுவைபோல் தன்னை தானே அவமானப்படுத்தும் வகைகளிலும் அவர் நிகழ்ச்சியில் நடந்துகொள்வார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒருமுறை WWE நிகழ்ச்சிக்கு வந்து மெக்மோகனுக்கு மொட்டை அடிக்கும் வீடியோவை யாரும் மறந்திருக்க முடியாது.

ஓய்வு அறிவிப்பு
WWE இல் உள்ள வீராங்கனைகளுடன் நெருக்கமாக இருப்பதை போன்று அந்த நிகழ்ச்சியிலேயே காட்டிக்கொள்ளும் வின்ஸ் மெக்மோகன் மீது உண்மையிலேயே ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தனது 77 வது வயதில் அவர் ஓய்வை அறிவித்து பதவி விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக தனது மகள் ஸ்டெஃபானி மெக்மோகன் இடைக்கால சி.இ.ஓவாக பணியாற்றுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications