“டுவிஸ்டு”.. அதிர வைத்த WWE வீராங்கனை சாரா லீ மரணம்! தலை மற்றும் உடலில் காயங்கள் - பரபரப்பு காரணம்
வாஷிங்டன்: உலகளவில் ரசிகர்களை கொண்ட மல்யுத்த நிகழ்ச்சியான WWE இல் பங்கேற்ற சாரா லீ என்ற வீராங்கனை மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்துக்கான பரபரப்பு காரணம் பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்து உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் தன்வசம் ஈர்த்துள்ளது நிகழ்ச்சி WWE. WWF என்று அழைக்கப்பட்டு வந்த இந்த மல்யுத்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் WWE என்று மாற்றப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தொழில்முறை மல்யுத்தத்தில் திரைக்கதைகளையும் புகுத்தி பல்வேறு புதுமைகளைகள் சேர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த WWE அனைத்து வயது, பாலினங்களை சேர்ந்த பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு இருக்கிறது. ஆண்கள் பெண்கள் என இருபாலினருக்கு என தனித்தனியாகவும், சில சமையங்கள் இணைத்து இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் பிரபலமான ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்களும் பிரபலமாகிக்கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு பெண் போட்டியாளராக இருந்தவர்தான் சாரா லீ. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த இவர், WWE இல் ஒளிபரப்பான டஃப் எனாஃப் இன் 6 வது சீசனின் வெற்றியாளர் ஆவார். இதற்காக இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன. 3 குழந்தைகளுக்கு தாயான சாரா லீ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்து இருக்கிறார்.
தனது கணவர், குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வந்த சாரா லீ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் WWE ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. டெக்சில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சாரா, சில கடிதங்களையும் விட்டுச் சென்றதாக கூறப்பட்டது.
சாராவின் மர்ம மரணத்துக்கு காரணம் என்ன? இயற்கையான மரணமா? கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கேள்விகள் எழத் தொடங்கின. இது தொடர்பாக டெக்சாஸ் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் தற்போது பிரேத பரிசோதனையின் மூலம் வெளியாகி உள்ளது. அதில் அவர் முறையற்ற போதை மருந்துகள் மற்றும் மதுவை கலந்து அருந்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம்பெடமைன்கள், டாக்ஸிலமைன் மற்றும் மதுவை அவர் உட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் சாரா லீயின் உடல் மற்றும் தலையில் காயங்கள் இருந்தது தெரியவந்து உள்ளது. இதை வைத்து அவர் கீழே விழுந்த காரணத்தினாலேயே இறந்திருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் நம்பினர். ஆனால், சாரா லீ தற்கொலை செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிபடுத்தி உள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications