டிரம்பால் பதறிய உலக நாடுகள்.. அந்த டிரம்பையே கதறவிட்ட சீனா.. நடுவில் புதின் வேற! எல்லாமே முக்கியம்
வாஷிங்டன்: எப்போதும் சர்வதேச நிகழ்வுகள் தான் இந்தியாவின் போக்கையும் ஓரளவுக்குத் தீர்மானிக்கிறது. அதன்படி இந்தாண்டு உலகளவில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட 6 முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம். இவை சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதே உண்மை.!
சர்வதேச நிகழ்வுகள் என்பது பட்டாம்பூச்சி விளைவைப் போலச் சர்வதேச அளவில் எதிரொலிக்கும். அதன்படி இந்தாண்டு உலகளவில் நடந்த 6 முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

அமெரிக்க அதிபரான டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு இறுதியில் நடந்தாலும் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் தான் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றார். ஜனவரி 2025ல் அவர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் கைதிகளைப் போல வெளியேற்றப்பட்டனர்.
அதோடு நிற்கவில்லை.. அடுத்து சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் மீதும் கெடுபிடிகள் ஆரம்பமானது. சிறு தவறு செய்தாலே நாடு கடத்தும் முறையை டிரம்ப் கொண்டு வந்தார். இதற்கெல்லாம் டிரம்ப் தரப்பு சொல்லும் ஒரே விளக்கம், "அமெரிக்க விசா என்பது ஒரு சலுகை தானே தவிர.. உரிமை இல்லை" என்பதாகும். ஹெச்-1பி விசா கட்டண உயர்வு, விசா கோரி விண்ணப்பிப்போரின் சமூக வலைத்தளங்களைச் சரிபார்ப்பது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டு வந்தார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
சர்வதேச அளவில் நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு என்றால் இந்தியா பாகிஸ்தான் மோதலைச் சொல்லலாம். ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தைபாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இந்தத் தாக்குதலை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, இந்தியப் பாதுகாப்புப் படை மே 7ம் தேதி அதிகாலையில் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான், அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றது. அதற்கு இந்தியா தரமான பதிலடியைக் கொடுக்கவே அதைச் சமாளிக்க முடியாமல் வெள்ளைக் கொடி காட்டி சரண்டரானது பாகிஸ்தான்!
ரஷ்யா உக்ரைன் விவகாரம்
ரஷ்யா- உக்ரைன் போரும் இந்தாண்டும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த போர் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்தாலும் இந்தாண்டு தான் இதில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் இருந்தது. போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் நேரடியாக முயன்றார். இதற்காக புதினை கூட நேரில் சந்தித்துப் பேசினார். அதேபோல உக்ரைன் தரப்பு உடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.
ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடக்கும்போது இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றே பலரும் கருதினர். டிரம்ப் கூட இந்த போர் சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் அமைதி ஒப்பந்தம் இறுதியாகப் போகிறது என்றும் தொடர்ந்து சொல்லி வந்தார். இதற்கான அமைதி திட்டத்தையும் அமெரிக்கா வெளியிட்டது. இப்படி பல கட்ட முயற்சிகள் இருந்த போதிலும் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஈரான்- இஸ்ரேல் போர்
அடுத்து ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேல் ஹமாஸ் போரைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. இதனால் அந்த இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவானது. ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. சுமார் 12 நாட்கள் போர் தொடர்ந்தது. அதன் பிறகு அமெரிக்கா தலையிட்ட பிறகே மோதல் முடிவுக்கு வந்தது.
டிரம்ப் வரி
இந்தாண்டின் மற்றொரு முக்கிய விஷயம் டிரம்ப் வரி. ஏப்ரல் மாதம் முதலில் இறக்குமதி வரி குறித்து டிரம்ப் அறிவித்தார். அப்போது அமெரிக்க கடன் பத்திரங்கள் திடீரெனப் பெரியளவில் விற்கப்பட்ட நிலையில், வரியை வாபஸ் பெற்றார். பிறகு ஆகஸ்ட் மாதம் மீண்டும் வரிகள் அமலுக்கு வந்தது. குறிப்பாகச் சீனா மீது டிரம்ப் அதிக வரியை விதித்தார். சீனாவும் பதிலடியாக வரி விதித்தது. இதில் இருதரப்பு உறவுகளை மேலும் பாதித்ததுடன், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இறுதியில் ஒரு வழியாக அமெரிக்கா சீனா இடையே வரி விகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. அதேநேரம் இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம்
மேலும், இந்தாண்டு 3 தெற்காசிய நாடுகளில் மிகப் பெரிய மக்கள் போராட்டங்கள் நடந்தன. முதலில் நேபாளம்.. அங்குச் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரியளவில் போராட்டம் வெடித்தது. இதனால் அங்கு ஆட்சி மாறும் சூழல் கூட ஏற்பட்டது. அதேபோல பாகிஸ்தானிலும் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில், அவரது உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனப் போராட்டம் நடந்தது. அதேபோல வங்கதேசத்திலும் மாணவர் தலைவர் உஸ்மான் கொலையைத் தொடர்ந்து மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
F1 Visa: இந்திய மாணவர்களுக்கான அமெரிக்க கல்வி விசா சரிவு! டிரம்ப் நெருக்கடி! -
Donald Trump: தோற்றுப் போய்ட்டாங்க.. ஈரானுக்கு இனிமேல்தான் இருக்கு! கடுமையாக எச்சரித்த டிரம்ப் -
இந்தியாவுக்கு பெர்மிஷன் ஏன்? ரஷ்ய ஆயில் பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானை தாக்கட்டுமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் மூக்கை உடைத்து அனுப்பிய சவுதி ‘பிரின்ஸ்' -
எங்களை போட்டு அடிக்காதீங்க.. போரை நிறுத்த ஈரானிடம் பேசும் சவுதி அரேபியா! டிரம்பை நம்பாத ‘பிரின்ஸ்' -
பெட்ரோல் - டீசல் விலை உயரப்போகுது.. 6 ஆண்டுக்கு பின் புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய்! ஷாக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications