இப்படியா சாப்பாடு போடுவீங்க..காதலன் வீட்டில் அளித்த விருந்தால் அப்செட் ஆன காதலி..'பிரேக் அப்’
வாஷிங்டன்: முதல் முறை காதலன் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற போது அங்கு அளிக்கப்பட்ட உணவு பிடிக்காததால் அப்செட் ஆன இளம் பெண் தனது காதலை முறித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த காரணத்திற்காக கூட காதல் முறியுமா? என்ற தொனியில் நெட்டிசன்கள் பலரும் இது குறித்து விவாதித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உருகி உருகி காதலித்து விட்டு.. ஒன்றாக பீச், பார்க் என்று சுற்றிய பிறகும் கூட காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படுவது உண்டு. இப்படி பிரேக் அப் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கும்.
ஆனால், சீனாவிலோ காதலன் வீட்டில் தனக்கு பிடித்த உணவை கொடுக்கவில்லை என்று காதலை இளம் பெண் ஒருவர் முறித்துக்கொண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் பரவி நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது. இந்த நிகழ்வு குறித்த விவரம் வருமாறு:-

காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண்
சீனாவை சேர்ந்த 20-வயதான இளம் பெண் தனது காதலன் வீட்டிற்கு முதல் முறையாக சென்று இருக்கிறார். இரண்டு நாள் காதலன் வீட்டில் தங்கியிருக்கும் திட்டத்துடன் இளம் பெண் சென்றுள்ளார். முதல் முறையாக தனது காதலனின் பெற்றோரை சந்திக்க இருக்கிறோமே என்ற ஆர்வமும் பதற்றமும் இளம்பெண்ணுக்கு இருந்துள்ளது. காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணை காதலனின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

ஒரு பிடி பிடித்து விட வேண்டும்
மதிய நேரத்தில் வந்திருப்பதால் நேரடியாக மதிய உணவு சாப்பிட வலியுறுத்திய காதலனின் பெற்றோர்கள் டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்று இருக்கின்றனர். பதற்றத்தில் இருந்தாலும் உணவை ஒரு பிடி பிடித்து விடலாம் என ஆசை ஆசையாய் உணவை எதிர்பார்த்து கொண்டிருந்து இருக்கிறார். முதல் முறையாக வீட்டிற்கு வந்து இருக்கிறோம்.. எப்படியும் தடல் புடலான விருந்துதான் வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்துடன் இருந்த அந்த இளம்பெண் உணவை ஒரு பிடி பிடித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

வெறும் நூடூல்ஸ் மட்டும் தானா
ஆனால், வழக்கமான நூடூல்ஸ், ஃபிரைட் முட்டைகள், பூசணிக்காயில் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்கள் ஆகியவையே காதலன் வீட்டில் பரிமாறியிருக்கிறார்கள். முதல் முறை வீட்டிற்கு வந்து இருக்கிறோம்.. நமக்காக வித விதமான உணவுகளை செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால் இப்படி செய்து விட்டார்களே என செம அப்செட் ஆகியிருக்கிறார். மேலும், காதலன் வீட்டில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் நூடுல்ஸ் உணவையே வழங்கியிருக்கிறார்கள்.

பிரேக் அப் சொல்லிவிட்டு கிளம்பிய பெண்
ஆனால், நூடுல்ஸே தனக்கு பிடிக்காது என அலட்டிக்கொண்ட இளம்பெண் இது குறித்து காதலனிடம் கூறியிருக்கிறார். காதலனோ எங்கள் வீட்டில் அடிக்கடி இதுபோன்ற உணவையே சாப்பிடுவோம் என சொல்லியிருக்கிறார். இதனால், ஒரு முடிவுக்கு வந்த இளம் பெண் இரண்டு நாட்கள் முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு இனி உன்னுடன், உனது குடும்பத்துடன் வாழ முடியாது என கூறி பிரேக் அப் சொல்லி விட்டு கிளம்பியிருக்கிறார்.

இதற்கெல்லாம் காதலனை பிரிய வேண்டுமா?
காதலர்களுக்குள் மனவேறுபாடுகள் வருவது இயல்புதான். அதற்கு இருவருடைய குணாதிசயங்கள் ஒத்துபோகாதது.. பழக்க வழக்கங்கள் பிடிக்காதது என பல காரணங்கள் இருக்கும். ஆனால், காதலன் வீட்டில் கொடுக்கும் சாப்பாடு நமக்கு செட் ஆகாது எனக் கூறி காதலை முறித்துக் கொண்டு இளம்பெண் கிளம்பியது பற்றி நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கெல்லாம் காதலனை பிரிய வேண்டுமா? என சில நெட்டிசன்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்களோ.. தன்னை காதலன் வீட்டில் உரிய மரியாதையுடன் நடத்தவில்லை என்பதை திருமணத்திற்கு முன்பே உணர்ந்து விட்டதால்தான் அந்தப் பெண் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications