ப்பா இவ்வளவு கோடியா! நாகையில் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை விற்க முயன்ற மீனவர்கள்.. வளைத்த போலீஸ்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கிலத்தின் அம்பர்கிரீஸ் எனப்படும் வாந்தியை விற்க முயன்ற மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமிலங்கலத்தின் எச்சில் அல்லது வாந்தி என்று அழைக்கப்படும் அம்பர்கிரிஸ் உலகின் மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாகும். திமிங்கலத்தின் செரிமானத்திற்கு பயன்படும் அம்பர்கிரிஸை எடுப்பதற்காக உலகம் முழுக்க திமிலங்கலங்கள் கொல்லப்படுவது வழக்கமாகி உள்ளது.
சாம்பல் நிறத்தில் இருக்கும் அம்பர்கிரிஸ் திரவத்தை திமிங்கலங்கள் பொதுவாக செரிமானத்திற்கு பின் வெளியே வாந்தி எடுக்கும். ஆனால் சமீப நாட்களில் திமிங்கலங்களை கொன்று பலர் இந்த அம்பர்கிரிஸை எடுத்து விற்பனை செய்கிறார்கள்.

ஏன் முக்கியம்
கடலோரத்தில் கட்டிகள் போல ஒதுங்கும் இந்த அம்பர்கிரிஸ் வாசனை திரவியங்களை தொடங்கி பல்வேறு மருந்து பொருட்கள் வரை தயாரிக்க உதவுகிறது. சீனாவில் இதன் மதிப்பு மிக அதிகம். பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கூட அம்பர்கிரிஸ் மருந்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 1 கிலோ அம்பர்கிரிஸ் 1-2 கோடி ரூவாய் வரை கூட விற்பனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் வெறும் ஒரு கிலோ அம்பர்கிரிஸுக்கு இவ்வளவு மதிப்பு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தியா
இந்தியாவிலும் சமீப நாட்களாக அம்பர்கிரிஸ் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. திமிங்கலங்களை கொன்று அம்பர்கிரிஸை எடுப்பது வழக்கம் ஆகி உள்ளது. அதோடு கரையோரத்தில் ஒதுங்கும் அம்பர்கிரிஸை விற்பது வழக்கம் ஆகி உள்ளது.சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் கூட கார் ஒன்றில் இருந்து அம்பர்கிரிஸ் போலீசார் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை
இந்த நிலையில்தான் நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் கடற்கரை அருகே திமிங்கிலத்தின் அம்பர்கிரீஸை கண்டெடுத்துள்ளனர். இந்த அரியவகை அம்பர் கிரீஸ்சை வனத்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்காமல் அதனை வீட்டினுள் பதுக்கி வைத்து விற்பனைக்கு முயன்றுள்ளனர்.

செய்திகள்
ஆனால் சமீப நாட்களாக அம்பர் கிரீஸ் குறித்த செய்திகள் நிறைய பரவி வருவதால் கடலோர காவல்படையினர் பலர் தீவிரமாக தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில்தான் வெள்ளப்பள்ளம் அருகே வியாபாரியை வரவழைத்து அம்பர்கிரீஸை விற்க இருப்பதாக நாகை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்பார்மர்கள் மூலம் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

கைது
இதையடுத்து குற்ற புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் சென்ற கியூ பிரிவு போலீசார் திமிங்கிலத்தின் அம்பர்கிரீஸை விற்க முயன்ற வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த இருவரையும் சுற்றிவளைத்தனர். அப்போது அவர்களின் பையிலிருந்து சுமார் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் அரியவகை அம்பர்கிருஸ் இருப்பது தெரியவந்தது.

நடவடிக்கை
இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோதமாக அம்பர் கிரீஸ்சை வியாபாரியிடம் விற்க முயன்ற வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரையும் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகை க்யூ பிரிவு போலீசார் தப்பி ஓடிய வியாபாரியையும் வலைவீசி தேடி வருகின்றனர். கடல்வாழ் திமிங்கிலத்தின் உமிழ்நீரான அம்பர்கிரீஸ் என்பது, வாசனை திரவியங்களுக்கும், மதுபானங்களுக்கும், மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications