ஆடிப்போன மேற்கு வங்கம்.. நிரம்பி வழியும் மருத்துவமனை குழந்தை வார்டுகள்! அதென்ன அடினோ வைரஸ்?
மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை தாக்கி வரும் அடினோ வைரசால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை தாக்கி வரும் புதிய நோயால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். இந்த நோயின் பெயர் அடினோ வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது ஒரு பெயரில் மாதம் ஒரு நோய் இந்தியாவில் பரவி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பேரழிவுக்கு பிறகு எந்த நோய் பரவினாலும் அது ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
அந்த வகையில்தான் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை புதிய நோய் ஒன்று தாக்கி இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.

புதிய நோய்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்கள் பரவி சில குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனை அடுத்து அவர்களின் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதித்ததில் அடினோ வைரஸ் என்ற புதிய நோய் அவர்களுக்கு மத்தியில் பரவி வருவது தெரியவந்தது.

காய்ச்சல், சளி
இந்த நோயின் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மேற்கு வங்க மாநிலத்தில் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்து உள்ளன. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

நிரம்பிய மருத்துவமனைகள்
மேற்கு வங்கத்தில் கடந்த 2 வாரங்களாக அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தை வார்டுகள் நிரம்பி வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். வெண்டிலேட்டர்கள் 100 சதவீதம் நிரம்பிவிட்டது எனவும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளிலும் இதே நிலை தொடர்வதாக அவர் கூறி உள்ளார்.

அடினோ வைரஸ் என்றால் என்ன?
குறிப்பாக 2 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு இந்த நோய் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடினோ வைரஸ் என்பது பல வைரஸ்களின் குழுவாகும். இவை நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

எப்படி பரவும்?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளையும், பள்ளி, மருத்துவமனைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு அதிகம் சென்று வரும் குழந்தைகளிலும் அதிகம் பாதிக்கும். ஒருவரை தொடுவதன் மூலமும் இந்த அடினோ வைரஸ் பாதிக்கும். குறிப்பாக நோய் பாதித்தவரின் தும்மல், இருமல், சளி மூலமாக இந்த நோய் எளிதில் பரவும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு என தனி மருந்துகளோ, சிகிச்சை முறையே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனை.

அறிகுறிகள் என்ன?
சளி, சுவாச பிரச்சனைகள், காய்ச்சல், தொண்டை வலி, நிமோனியா, காதுகளில் நோய் தொற்று, கண் சிவத்தல், வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்ஜி அல்லது சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் அது அடினோ வைரஸ் பாதிப்பாக இருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications