கொரில்லா முறை தாக்குதல்! ராணுவ அதிகாரி குடும்பம் பலி! யார் இந்த மணிப்பூர் மக்கள் விடுதலை ராணுவம்?
இம்பால்: மணிப்பூரில் கான்வாய் மீதான தாக்குதலில் ராணுவ கமாண்டிங் அதிகாரி, மனைவி, மகன் மற்றும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாத அமைப்பான மக்கள் விடுதலை ராணுவம் என்றால் என்ன , அது எதற்காக அமைக்கப்பட்டது என்ற தகவல்களை பார்ப்போம்.
மணிப்பூர்- மியான்மர் எல்லையில் சூராசந்த்பூர் மாவட்டம் அருகே வந்த போது இன்று காலை 10 மணிக்கு அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் இருந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி கலோனல் விப்லாப் திரிபாதி, அவரது மனைவி, மகன், மேலும் 4 வீரர்கள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் மிகப் பெரிய மற்றும் மோசமான தீவிரவாத இயக்கமான மக்கள் விடுதலை ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அனைவரின் பார்வையும் இந்த தீவிரவாத அமைப்பின் மீதுள்ளது. யார் இந்த அமைப்பு, எப்போது உருவாக்கப்பட்டது, எதற்காக அமைக்கப்பட்டது போன்ற தகவல்களை கூகுள் தேடுபொறிகளில் தேடி வருகிறார்கள்.

மக்கள் விடுதலை ராணுவம்
தற்போது அந்த மோசமான தீவிரவாத அமைப்பு குறித்து நாம் பார்க்கலாம். கடந்த 1978ஆம் ஆண்டு மக்கள் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு என் பிஷேஷ்வர் சிங் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து மக்கள் விடுதலை ராணுவத்தை ஏற்படுத்தினார்.

தனிநாடு
இந்த அமைப்பின் கோரிக்கை மணிப்பூரை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடு உருவாக்குவது ஆகும். மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிஸ்ட் தத்துவங்களை இந்த அமைப்பு பின்பற்றுகிறது. தனி மணிப்பூர் கோரிக்கைக்காக நாகாலாந்து தனி நாடு கோரி வரும் மங்கோலிய இனத்தை சேர்ந்த நாகாக்கள் அமைப்புடன் இவர்கள் கைகோர்த்துக் கொண்டு தங்களது தனி மணிப்பூர் கோரிக்கைக்கு போராடி வருகிறார்கள்.

சீனாவின் ஆதரவு
பின்னர் இந்த அமைப்பானது சீனாவின் ஆதரவுடன் பொதுவான எதிரியை எதிர்த்து போர் நடத்த நாகாக்களையும் மிசோவையும் தூண்டிவிட்டது. பிஎல்ஏவை ஏற்படுத்திய பிஷேஷ்வர் சிங், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து ,மணிப்பூர் ஆகிய கிழக்கு பகுதிகளையும் மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உருவாக்க திட்டங்களை வகுத்திருந்தார். இதை அடிப்படையாக வைத்து அவற்றை இந்தியாவிலிருந்து பிரித்தெடுப்பது என்பதுதான் அவரது திட்டமாகும்.

மாற்று கட்சி
இதையடுத்து 1989 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பாக புரட்சிகர மக்கள் முன்னணி (ஆர்பிஎஃப்) என்பதையும் பிஷேஷ்வர் சிங் தொடங்கினார். அந்த மாநிலத்தில் உள்ள கட்சிகளுக்கு மாற்றாக இந்த அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தெற்காசிய பயங்கரவாத போட்டலின்படி இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் விரிவான பட்டியலை பராமரிக்கும் ஒரு அரசாங்கத்தை வங்கதேசத்தில் ஆர்பிஎஃப் நடத்துகிறது.

மணிப்பூர்
இது தற்போது 4 பிரிவுகளை கொண்டுள்ளது. மணிப்பூரின் மேற்கு மலை பகுதியைச் சேர்ந்த சாடார், கிழக்கு பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சாடார் குன்று பகுதிகள், மணிப்பூரின் ஒட்டுமொத்த மலை பகுதிகள், இம்பாலாவின் ஒட்டுமொத்த மலை பகுதிகள் ஆகும். ஒவ்வொரு பிரிவிற்கு கமாண்டர், துணை நிலை அதிகாரிகள், ஆயுதமேந்திய படை உள்ளிட்டவை இருக்கும். பிஎல்ஏ என்பது மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராகவும், மணிப்பூரின் 3 தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து செயல்படும் அமைப்பாகவும் உள்ளது. இந்த அமைப்பு மிக பெரிய மற்றும் மிகவும் மோசமான தீவிரவாத அமைப்பாகவும் உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications