For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடி வெட்டுவதற்காக.. அமெரிக்காவில் இருந்து துருக்கி பறந்த பெண்.. இது வேற லெவல் ஐடியா!

தலைமுடியை வெட்டுவதற்காக அமெரிக்காவில் இருந்து துருக்கி இளம்பெண் ஒருவர் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: தனக்கு பிடித்தமாதிரி, அதே சமயத்தில் விலை குறைவாக தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து துருக்கி சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிப்பு, வேலை, மருத்துவம் எனப் பல காரணங்களுக்காக மனிதர்கள் நாடு விட்டு நாடு செல்வது பற்றிக் கேள்வி பட்டிருப்போம். சிலர் சுற்றுலாவிற்காகக்கூட மற்ற நாடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பெண், 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து வெறொரு நாட்டிற்கு சென்று வந்துள்ளார் என்றால், கேட்பதற்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதல்லவா..?

அமெரிக்காவில் தான் இந்த ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது.

கட்டணம் அதிகம்

கட்டணம் அதிகம்

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ப்ரைன் எலிஸ். இவர் வழக்கமாக தான் முடி வெட்டிக் கொள்ளும் கடையில், தனக்குப் பிடித்தமான ஹேர்ஸ்டைல் ஒன்றைக் காட்டி, இதே மாதிரி தனக்கும் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தக் கடைக்காரர், 'செய்யலாம் அதற்கு 4 ஆயிரம் டாலர் செலவாகும்' எனத் தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் இது ரூ. 3.12 லட்சம் ஆகும்.

இணையத்தில் தேடல்

இணையத்தில் தேடல்

தலைமுடிக்காக இவ்வளவு செலவு செய்ய எலிஸுக்கு மனம் வரவில்லை. ஆனால் அதற்காக தனக்கு பிடித்தமான ஹேர்ஸ்டைலை செய்து கொள்ளாமல் இருக்கவும் அவர் விரும்பவில்லை. எனவே, தனக்குப் பிடித்த ஹேர்ஸ்டைலை வேறு எங்காவது, இதைவிடக் குறைவான கட்டணத்தில் செய்து தருவார்களா என அவர் இணையத்தில் தேடத் தொடங்கினார்.

துருக்கி பயணம்

துருக்கி பயணம்

அதன்பலனாக துருக்கியில் மிகக் குறைந்த கட்டணத்தில் தனக்கு பிடித்த அதே ஹேர்ஸ்டைல் செய்பவர்கள் இருப்பதை எலிஸ் கண்டுபிடித்தார். பிறகென்ன, 'பிளைட்டைப் பிடி.. துருக்கிக்குப் பற..' என விமானத்தில் துருக்கிக்குப் பறந்துவிட்டார். முடி வெட்டுவதற்காக மட்டும் எனச் சென்றவர், அந்த நாட்டின் அழகில் மயங்கி, இரண்டு வாரம் அங்கு சுற்றுலாப் பயணியாக இருந்து விட்டு வந்துள்ளார்.

பாதியாகக் குறைந்த செலவு

பாதியாகக் குறைந்த செலவு

இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், விமானத்தில் பறந்து சென்று, பிடித்த ஹேர்ஸ்டைலை செய்து, இரண்டு வாரம் சுற்றுலா இருந்து.. என மொத்தமாக எல்லாவற்றிற்கும் சேர்த்தே எலிஸுக்கு $2,200 (அதாவது இந்திய மதிப்பில் 1.7 லட்ச ரூபாய்) தான் செலவாகியுள்ளது. அமெரிக்காவில் அவரது ஹேர்டிரஸ்ஸர் கேட்ட கட்டணத்தில் பாதி என்ற அளவிலேயே தான் நினைத்ததைவிட மேலாக செய்து முடித்து விட்டார் எலிஸ்.

8 மணி நேரம் ஆனது

8 மணி நேரம் ஆனது

தனது சிகை அலங்காரத்தை மாற்றுவதற்கு முன், பின் என சமூகவலைதளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார் எலிஸ். அதில், "துருக்கியில் எனக்கு பிடித்த ஹேர்ஸ்டைலைச் செய்ய குறைவானக் கட்டணமே ஆனது. சுமார் எட்டு மணி நேரம் செலவழித்து நான் விரும்பியபடி எனது முடியை மாற்றினார்கள். நான் அவர்களுக்கு 450 டாலர் டிப்ஸ் வழங்கினேன்.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

அமெரிக்காவில் நான் வழக்கமாக முடி திருத்தும் கடைக்கு பல ஆண்டுகளாகச் சென்று வருகிறேன். ஆரம்பத்தில் அங்கும் கட்டணம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள். அதனால்தான் இம்முறை துருக்கிக்கு சென்று விட்டேன்" என எலிஸ் தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

எலிஸின் இந்தப் பதிவு நெட்டிசன்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 'நிச்சயம் இது புத்திசாலித்தனமான முடிவு.. மனதிற்குப் பிடித்தபடி ஹேர்கட் செய்ததோடு, இரண்டு வார காலம் சுற்றுலாவும் செய்து விட்டீர்கள்' என எலிஸை சிலர் கமெண்ட்களில் பாராட்டியுள்ளனர். 'நமக்குப் பிடித்த விசயங்களை இப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்' எனவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

English summary
A woman flew over 6000 miles (10,000 kilometres) to Turkey to get a haircut after her local salon quoted her $4,000 (Rs 3.12 lakh) for her "dream hair".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X