ஆம் ஆத்மி பற்றி தெரியுமா.. யோகி ஆதித்யநாத் பகீர் குற்றச்சாட்டு.. அனல் பறக்கும் குஜராத்
காந்திநகர்: குஜராத்தில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆம் ஆத்மி கட்சியையும் டெல்லி முதலமைச்சரையும் கடுமையாக சாடியுள்ளார்.
ஆம் ஆத்மி பயங்கரவாத நலன்விரும்பி கட்சி எனவும், எனவே அவர்களுக்கு வாக்களித்து வாக்காளர்கள் வாக்குகளை களங்கப்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜக-ஆம் ஆத்மி என இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

யோகி ஆதித்யநாத்
குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் பாஜக சார்பில் பேரணி பொதுக்கூட்டம்நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுசிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "ஆம் ஆத்மி கட்சிஅடிப்படையில் பயங்கரவாத நலன் விரும்பி கட்சியாகும். அதன் ஒருங்கிணைப்பாளராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பயங்கரவாதத்தின் அனுதாபியாவார். எல்லையில் ராணுவ வீரர்கள் நமக்காக போராட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சர்ஜிகல் ஸ்டைகிற்கு இவர் ஆதாரங்களை கேட்டுக்கொண்டிருக்கிறார். நமது வீரர்களிடம்நாமே ஆதாரம் கேட்கலாமா?

ராமர் கோயில்
தங்கள் முதுகை இந்திய வீரர்கள் உடைத்துவிட்டார்கள் என்று பாகிஸ்தான் கூக்குரலிடுகிறது. ஆனால் இவர்கள் ஆதாரத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமா? ராமர் கோயிலை எதிர்க்கிறார்கள். எனவே அக்கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை களங்கப்படுத்தாதீர்கள். தீவிரவாதமும், ஊழலும் ஆம் ஆத்மி கட்சியின் மரபணுவின் ஒரு பகுதி. நம்மையும் நம்முடைய கலாச்சாரத்தையும் காக்கும் பாஜகவுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.

தேர்தல்
கடந்த 27 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சியின் வாக்கு வங்கிகணிசமான அளவில் சரிந்துள்ளது. இதனை இந்த தேர்தலில் சரிசெய்ய கட்சிதொடர்ந்து முயன்று வருகிறது. அதற்காக பிரதமர், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேச முதலமைச்சர்கள், முக்கிய அமைச்சர்கள் என பலரை களத்தில்இறக்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டம் டிசம்பர் 1ம் தேதியும்இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறுகிறது.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மியை பொறுத்த அளவில், முழு பலத்துடன் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் கட்சி 29 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இதில் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. இதனையடுத்து இந்த முறை தனி கவனம் செலுத்தி வருவதாக கட்சி தலைமை கூறியுள்ளது. என்ன இருந்தாலும், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கென பெரிய அளவில் தளம் இல்லை. இங்கு தற்போது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் அனைவரும் ஹரியானா, டெல்லி என வெவ்வேறு மாநிலங்களிலிருந்து களமிறக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications