இருட்டில் தவிக்கும் அமெரிக்காவிற்கு கனடா மின்சார உதவி
அமெரிக்காவில் வீசிய கடும் புயலால் அங்கு பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் உள்ள ஹைட்ரோ ஒன் என்ற மின்சார நிறுவனம் மூலம் மின்சார வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெர்ஜினியா, கொலம்பியா, மேரிலாந்து, இண்டியானா, ஒஹியோ உள்ளிட்ட பல மாநிலங்களை புயல் தாக்கியது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இண்டியானா-மேரிலாந்து வரையில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு சுமார் 30 லட்சம் பேர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அவதிப்படுகிறார்கள். அதிக வெப்பக்காற்று வீசுவதால் குளிரூட்டல் வசதி இல்லாமல் சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த புயல் கோர தாண்டவத்துக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியா, வெர்ஜினியா, ஒஹியோ மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சாரக் கோளாறு ஏற்படும் குறிப்பிட்ட வேளைகளில் அதனைச் சரிசெய்து தரவேண்டும் என்று ஹைட்ரோ ஒன் நிறுவனத்துடன் வட அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இதனடிப்படையில் கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் உள்ள ஹைட்ரோ ஒன் என்ற மின்சார நிறுவனம், அமெரிக்காவில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் பிற வர்த்தக அமைப்புகளுக்கும் மின்வசதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது இந்நிறுவனத்தின் பணியாட்கள் புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பகுதிகளில் மீண்டும் மின்சார வசதியைக் கொண்டு வருவதற்காக வாஷிங்டனுக்கும், அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். பால்டிமோர், வெர்ஜினியா, வாஷிங்டன் போன்ற நகரங்களுக்கு சுமார் 200 பணியாட்கள் வந்து இன்று முதல் பழுது நீக்கும் பணியைத் தொடங்குகின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டில் ஓஹியோவில் ஹரிக்கேன் புயலால் மின்சாரம் தடைபட்ட போதும், கடந்த 2010ஆம் ஆண்டில் கடும்புயலால் வெர்மாண்ட் மின்சாரத்தை இழந்து தவித்த போதும் இந்த ஹைட்ரோ ஒன் நிறுவனமே உதவியது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications