Dhurandhar 2 OTT Release: ஓடிடியில் வரும் துரந்தர் 2 படம்.. எதில், எப்போது எதிர்பார்க்கலாம்? லீக்கான தகவல்
சென்னை: பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் வரிசையில் தற்போது பேசப்படும் பெயர் 'துரந்தர்' மற்றும் அதன் தொடர்ச்சியான 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்'. இயக்குநர் ஆதித்யா தர் உருவாக்கிய இந்த படம், இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றையே மாற்றியிருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மிகப்பெரிய முயற்சி
2019-ம் ஆண்டு Uri: The Surgical Strike மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதித்யா தர், அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு துரந்தர் படத்தை இயக்கினார். இந்த படம் வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
நட்சத்திர கூட்டணி
துரந்தர் தொடரில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இசையை ஷஷ்வத் சச்தேவ் அமைத்துள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இந்த படம், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டது.
கதை
இந்த படத்தின் மையக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு இந்திய உளவாளி, பாகிஸ்தானுக்குள் சென்று அங்குள்ள அரசியல் சூழ்நிலையை இந்தியாவுக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கிறார். இந்த ஒரு வரி கதையை அடிப்படையாக கொண்டு, அதில் அரசியல், ரகசிய நடவடிக்கைகள், அதிரடி காட்சிகள், எமோஷனல் என படம் நகர்கிறது. அதனால் தான் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வசூல் சாதனையை உடைத்த துரந்தர்
முதல் பாகமான துரந்தர் படம் உலகளவில் ரூ.1300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதன் வெற்றியை தொடர்ந்து வெளியான Dhurandhar: The Revenge (மார்ச் 19 ரிலீஸ்) இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
துரந்தர் 2 வசூல்
இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ.3000 கோடிக்கு மேல் வசூல் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு வசூல் செய்ததால், இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என்று பார்க்கப்படுகிறது.

தங்கல் சாதனைக்கு சவால்
தங்கல் படம் இந்திய சினிமாவின் உயர்ந்த வசூல் சாதனையாக நீண்ட காலமாக இருந்தது. ஆனால் தற்போது துரந்தர் 2 மட்டும் ரூ.2000 கோடியை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது நடந்தால், 'தங்கள்' சாதனையையும் இந்த படம் முறியடிக்கலாம் என்று திரையுலகில் பேசப்படுகிறது.
சர்ச்சைகள்
இந்த படத்திற்கு வெற்றியோடு சேர்த்து சில சர்ச்சைகளும் எழுந்தன. அரசியல் பின்னணியை எப்படி சித்தரித்துள்ளது என்ற விவாதம், பாகிஸ்தான் தொடர்பான காட்சிகள் குறித்து சில எதிர்ப்புகள், தேசபற்று அம்சங்கள் ஓவராக காட்டப்பட்டுள்ளதா என்ற விமர்சனங்களும் வந்தது. ஆனால் இந்த சர்ச்சைகள் கூட படத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்க உதவியதாகவே பலர் கருதுகின்றனர்.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அதற்கான பதிலாக, துரந்தர் 2: தி ரிவெஞ்ச் படம் மே 14ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திரையரங்கில் பார்க்க முடியாத ரசிகர்களும் விரைவில் இந்த படத்தை பார்க்க முடியும்.
துரந்தர் மற்றும் துரந்தர் 2 - இந்த இரண்டு படங்களும் சேர்ந்து இந்திய சினிமாவில் ஒரு புதிய வசூல் வரலாற்றை உருவாக்கியுள்ளன. அதிரடி கதை, பெரிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப தரம், மற்றும் சரியான மார்க்கெட்டிங்-இவை அனைத்தும் சேர்ந்ததால் இந்த படம் உலகளவில் பெரிய வெற்றியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications