Drishyam 3: பரபரப்பை கிளப்பும் ‘த்ரிஷ்யம் 3’ அப்டேட்.. ஜார்ஜ் குட்டி நிலைமை என்ன? ரிலீஸ் பற்றி வெளியான தகவல்
சென்னை: மலையாள சினிமாவில் சஸ்பென்ஸ் படங்கள் என்றாலே நினைவுக்கு வரும் முதல் பெயர்களில் ஒன்று 'த்ரிஷ்யம்'. (Drishyam) என்ற இந்த படத்தின் மூன்றாவது பாகம் குறித்து தற்போது வெளியாகும் தகவல்கள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

த்ரிஷ்யம் 3 ரிலீஸ் தேதி
மோகன்லால் நடிப்பிலும், ஜித்து ஜோசப் இயக்கத்திலும் உருவாகி வரும் 'த்ரிஷ்யம் 3', ஆரம்பத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்திய தகவல்படி, இந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கான முக்கிய காரணமாக வெளிநாடுகளில், குறிப்பாக அரபு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையே சொல்லப்படுகிறது. அந்த மார்க்கெட்டில் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு இருப்பதால், அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளியீட்டை தள்ளிப் போடுவது குறித்து படக்குழு யோசித்து வருகிறார்களாம். ஆனாலும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால், ரசிகர்கள் இன்னும் ஏப்ரல் 2 ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மோகன்லால் கொண்டாட்டம்
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை மோகன்லால் கடந்த ஆண்டு இறுதியிலேயே முடித்துவிட்டார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக கேக் வெட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோ கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
த்ரிஷ்யம் ஜார்ஜ் குட்டி
'த்ரிஷ்யம் 3' கதையைப் பற்றி பேசும்போது, ஜித்து ஜோசப் கூறிய ஒரு விஷயம் தற்போது அதிகம் பேசப்படுகிறது. அதாவது, "ஜார்ஜ்குட்டியின் வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்ன?" என்பதே இந்தப் படத்தின் மையம். இரண்டாவது பாகத்திற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த கதாபாத்திரம் மீண்டும் எந்த சிக்கலில் சிக்குகிறது, அதை எப்படி சமாளிக்கிறது என்பதுதான் இந்த பாகத்தின் முக்கிய ஈர்ப்பு.
த்ரிஷ்யம் வெற்றி
முதல் பாகம் 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு சாதாரண குடும்ப மனிதன் எப்படி சூழ்நிலையை சமாளித்து போலீஸை முந்துகிறான் என்பதைக் காட்டிய அந்த கதை, இந்திய சினிமாவே பேசும் அளவுக்கு ஹிட் ஆனது. அதேபோல், 2021ஆம் ஆண்டு வெளியான இரண்டாவது பாகமும் அதே சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த இரண்டு பாகங்களின் வெற்றியே மூன்றாவது பாகத்திற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கூட, "ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி இருக்கும் கதை தான் இது" என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.
இப்போதைக்கு வெளியாகும் தகவல்களின் படி, 'த்ரிஷ்யம் 3' முந்தைய இரண்டு பாகங்களை விட இன்னும் அதிகமான திருப்பங்களும், எதிர்பாராத கிளைமாக்ஸும் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஜார்ஜ்குட்டி கதாபாத்திரம் மீண்டும் எப்படி தப்பிக்கிறார் என்ற கேள்விதான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.
ரிலீஸ் தள்ளிப்போனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் வெளியிட்டால், அந்த வெற்றி இன்னும் பெரிய அளவில் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், 'த்ரிஷ்யம் 3' மீண்டும் ஒரு மாபெரும் சஸ்பென்ஸ் அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications