Jana nayagan : ஜனநாயகனுக்கு வந்த சோதனை.. ஓடிடியில் வரப்போகுதா? பின்னணி சம்பவம் இதுதான்!
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' படம் பற்றி கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்தில் பேசப்படாத விஷயங்களே இல்லை. "விஜயின் கடைசி படம்", "அரசியல் பயணத்திற்கு முன்னோட்டம்", "சென்சார் சிக்கலில் சிக்கிய படம்" என ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது அதிகம் பேசப்படுவது, இந்த படம் தியேட்டர் ரிலீஸை தவிர்த்து நேரடியாக ஓடிடி-யில் வெளியாகுமா என்பதுதான்.
முதலில் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டியதுதான். ஆனால் சென்சார் சர்டிபிகேட் தொடர்பான சில சர்ச்சைகள் காரணமாக அந்த ரிலீஸ் தள்ளிப் போனது. இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கே சென்றது. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஜனவரி 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் வரை சென்றாலும், "இந்த வழக்கில் தலையிட முடியாது" என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

இதனால் மீண்டும் 20ஆம் தேதிக்கு மேல் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த சட்டச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதால், படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரிய குழப்பத்தை உருவாக்கியது. அந்த சூழலில்தான், "படக்குழு தியேட்டரை விட்டுவிட்டு நேரடியாக ஓடிடி ரிலீஸுக்கு செல்லலாம்" என்ற தகவல் சில தினங்களாக பரவி வருகிறது.
குறிப்பாக சோசியல் மீடியாவில், "விஜயின் கடைசி படம் தியேட்டருக்கு வராமலேயே ஓடிடி-யில் வெளியாகலாம்" என்ற பேச்சு வேகமாக பரவியது. ஆனால் இதைப்பற்றி சினிமா வட்டாரங்களில் விசாரித்தால், அந்த தகவலுக்கு துளியும் அடிப்படை இல்லை என்றே சொல்கிறார்கள். காரணம் மிக எளிது. 'ஜனநாயகன்' படம் ஒரு சாதாரண படமல்ல. மொத்தமாக இந்த படத்தின் வியாபாரம் 400 கோடியை தாண்டி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதில் தியேட்டர் வியாபாரம் மட்டும் 300 கோடிக்கும் அதிகம். இதற்கு மேலாக, ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் 110 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வளவு பெரிய தொகையை ஒரு ஓடிடி நிறுவனம், தியேட்டர் ரிலீஸ் இல்லாமல், நேரடி டிஜிட்டல் ரிலீஸுக்காக மட்டும் செலவிடுமா என்ற கேள்வியே இங்கே முக்கியம்.
அதுமட்டுமல்ல, தியேட்டர் ரிலீஸுக்கான அனைத்து வியாபாரங்களும், ஒப்பந்தங்களும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அந்த முழு அமைப்பையும் மாற்றுவது என்பது மிகப்பெரிய நடைமுறை சிக்கல்களைக் கொண்ட விஷயம். விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், வெளிநாட்டு ரிலீஸ் ஒப்பந்தங்கள் என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ரத்து செய்து, ஓடிடி-க்கு மட்டும் செல்வது சாத்தியமற்ற விஷயம் என்றே சொல்லப்படுகிறது.
இதற்கு மேலாக இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. 'ஜனநாயகன்' படம் தெலுங்கில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்றாலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அது முழுக்க முழுக்க தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Pongal OTT: ஜனநாயகன் இல்லை.. ஓடிடியில் பொங்கல் கொண்டாட்டம் முழு ஸ்விங்! லிஸ்டில் இந்த படமும் இருக்கு
குறிப்பாக ஜனநாயகம், அதிகாரம், மக்கள், அரசியல் அமைப்பு போன்ற விஷயங்கள் படத்தில் மிகவும் அழுத்தமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயின் அரசியல் வருகையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இப்படம் அவருக்கு ஒரு முக்கியமான படிக்கட்டாக இருக்கும் என்றும், அதனால் இதை தியேட்டரில் மக்கள் கூட்டம் திரண்டு பார்க்க வேண்டும் என்பதிலேயே விஜய் உறுதியாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர்கள் பட்டியலைப் பார்த்தாலே படத்தின் முக்கியத்துவம் புரியும். விஜயுடன் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாபி தியோல் வில்லன் வேடத்தில் ஒரு வலுவான கதாபாத்திரம், பிரகாஷ் ராஜ் - ப்ரியாமணி இணைப்பு அரசியல் கோணத்தில் கதைக்கு முக்கியமான திசையை தரும் என்கிறார்கள். இதுபோன்ற கனமான நடிப்புகள் கொண்ட படத்தை, பெரிய திரையில் பார்க்கும் அனுபவமே தனி என்று படக்குழுவும் கருதுகிறதாம்.
அதனால், தற்போது பரவி வரும் "ஜனநாயகன் நேரடி ஓடிடி ரிலீஸ்" என்ற தகவல் வெறும் வதந்தி மட்டுமே. சட்டச் சிக்கல்கள் தீர்ந்ததும், படம் கண்டிப்பாக திரையரங்குகளில்தான் வெளியாகும் என்பதில் சினிமா வட்டாரங்கள் தெளிவாக இருக்கின்றன. ஒரே கேள்விதான் மீதமிருக்கிறது - அந்த நாள் எப்போது? ரசிகர்கள் அதற்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications