Sarvam Maya OTT: ஓடிடியில் கலக்கும் ‘சர்வம் மாயா’வில் இத்தனை விஷயம் இருக்கா? இதை கவனிச்சீஙகளா?
சென்னை: திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சர்வம் மாயா' படம், ரசிகர்களிடையே அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. "ரசிக்கும் படியான நல்ல ஆவி மற்றும் அழகான காதல்" என பலரும் இந்த படத்தை ரசிகர்கள் . பெரிய திருப்பங்கள், ஆக்ஷன், மாஸ் மொமென்ட்ஸ் இல்லாமல், மென்மையான உணர்வுகளோடு நகரும் ஒரு சின்ன கதை தான் 'சர்வம் மாயா' என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

படத்தில் ரசிகர்களை குழப்பிய சில மர்மங்கள்
படத்தில் வரும் சில காட்சிகள் குறித்து ரசிகர்கள் கேள்விகளும் எழுப்புகிறார்கள்.
"பேய் டெலுலு அப்பா ஏன் காரை wrong side-ல் நிறுத்த வேண்டும்? அதோட விபத்து ஏற்படப் போகும் அந்த வண்டியில் டிரைவர் இல்லையா?" என்பதுபோன்ற சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது. இப்படிப்பட்ட சில லாஜிக் கேள்விகள் இருந்தாலும், கதையின் மென்மையான ஓட்டமும் உணர்ச்சிகளும் அந்த குறைகளை மறைக்கச் செய்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
நல்ல ஆவி
'சர்வம் மாயா' ஒரு பேய் படம் என்றாலும், வழக்கமான ஹாரர் படங்கள் போல பயமுறுத்துவதில்லை. ரசிக்க வைக்கும் நல்ல ஆவியும், அதனுடன் இணையும் காதலும் இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது.
"சின்னதான ஒரு கதை, ரொம்ப அழகான படம். கடைசியில் டெலுலு சுயநினைவு இல்லாமல் இருப்பது போல காட்டும்போது கதை வேறு திசையில் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் நல்ல முறையில் முடித்திருந்தார்கள். சின்னதாக மெல்லியதாக ஒரு காற்று படும் மாதிரி தான் இந்த படம் முடிகிறது" என ரசிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
படத்தின் இறுதியில் டெலுலுவின் அம்மா ஹீரோவிடம் உங்கள தான் என் பொண்ணு காதலிச்சாளா? கேட்கும் ஒரு கேள்விக்கு நிவின் "ஆம்" என்று பதில் சொல்லும் காட்சி, பலருக்கு உணர்ச்சிப் பூர்வமான தருணமாக அமைந்துள்ளது. அந்த இடத்தில், டெலுலுவின் காதலை நிவினும் ஏற்றுக்கொண்டதாக தோன்றியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வம் மாயா படத்தில் டெலுலுவின் காதலன்
படம் முடிந்த பிறகு ரசிகர்கள் அதிகமாக விவாதிக்கும் கேள்வி இதுதான். டெலுலுவின் உண்மையான காதலன் நிவின் பாலி அல்ல என்று பலர் உறுதியாகக் கூறுகிறார்கள்.
டெலுலு சொல்லும் ஃப்ளாஷ்பேக் கதைப்படி, அவளது காதல் இருதலைக் காதல். அவளது காதலனுக்கு அவளை நன்றாகத் தெரியும். ஆனால் நிவின் பாலி, டெலுலுவை முதன்முதலில் சந்திக்கும் நாளிலிருந்தே அவளைத் தெரியாமல், அவளது அடையாளத்தைத் தேடிக்கொண்டிருப்பவராக காட்டப்படுகிறார்.
இதனால், நிவினுக்கும் டெலுலுவுக்கும் இதற்கு முன்பு எந்த அறிமுகமும் இல்லை என்பது தெளிவாகிறது. அதனால், நிவின் பாலி டெலுலுவின் மரணத்திற்கு முன்பான உண்மையான காதலன் அல்ல என்று ரசிகர்கள் முடிவுக்கு வருகின்றனர்.
உண்மையான காதலன் யார்?
இந்தக் கேள்விக்கான நேரடியான பதிலை படக்குழு வெளிப்படையாக சொல்லவில்லை. கதையின் இறுதியில், "மாயாவின் கடைசி ஆசை, அவளது பெற்றோர் அவளது காதலனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும்" என்று குறிப்பிடப்படுகிறது. டெலுலு சொன்ன தோற்றம் (அதாவது தாடி வைத்திருக்கும் ஹிந்து பையன்) நிவினுக்கு பொருந்துவதால், மாயாவின் அம்மா நிவினிடம், "உங்களைத் தான் என் மகள் காதலித்தாரா?" என்று கேட்கிறார். அந்த நேரத்தில் நிவினும் "ஆம்" என்று சொல்லிவிடுகிறார்.
இதனை ரசிகர்கள் இப்படியாகப் புரிந்துகொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆவியாக வரும் டெலுலு, நிவினை காதலித்திருக்கலாம். ஆனால் அவளது மரணத்திற்கு முன்பான உண்மையான காதலன் நிவின் அல்ல. டெலுலுவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நிவின் அவ்வாறு சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம்.
உண்மையான காதலனை கொண்டு வந்திருந்தால், அவன் ஏன் வரவில்லை, அதன் பிறகு என்ன நடந்தது போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த குழப்பங்களை தவிர்க்கவே இந்த முடிவு வைக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications