CREDAI FAIRPRO 24.. கோவையில் ஹோம் டீல்களின் திருவிழா தொடங்கியது! நினைத்த வீடுகளை இன்றே வாங்குங்கள்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: CREDAI Fairpro 2024 கோயம்புத்தூரில் கோலாகலமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் 30க்கும் அதிகமான சொத்து மேம்பாட்டாளர்களிடமிருந்து பிளாட்கள், வில்லாக்கள் என 100க்கும் அதிகமான ப்ராஜெட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தொடக்க நாளான இன்று பலர் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.

CREDAI என்பது இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பாகும். இவர்கள் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துக்களை விளம்பரப்படுத்துபவர்களாகவும், பில்டர்கள் மற்றும் டெவலப்பர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் கோவையில் இவர்கள் CREDAI FAIRPRO 24 எனும் கண்காட்சியை தொடங்கியுள்ளனர்.

CREDAI Coimbatore

தொடக்க நிகழ்வில் CREDAI கோயம்புத்தூர் தலைவர் குகன் இளங்கோ வரவேற்றுப் பேசுகையில், "பல்வேறு சொத்து மேம்பாட்டாளர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்கவும், திட்டங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தவும் ஃபேர்ப்ரோ எக்ஸ்போ நடத்தப்படுகிறது. கோயம்புத்தூர் பல்வேறு துறைகளில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. மட்டுமல்லாது கோவை, ரியல் எஸ்டேட் துறையில் சமீப காலமாக விரைவான வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

மாநில அரசு கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானை தொடங்கியுள்ளது. அதேபோல 3,500 சதுர அடி வரையிலான குடியிருப்புக் கட்டிடங்களுக்கு சுய அறிவிப்பு மூலம் ஒப்புதல் பெறுவதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இவை அனைத்தும் கோவையின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்" என்று கூறினார்.

இவரை தொடர்ந்து பேசிய ஃபேர்ப்ரோ 2024ன் தலைவர் சுரேந்தர் விட்டல், "இந்த கண்காட்சியானது ஒவ்வொரு சொத்து மேம்பாட்டாளர்களுக்கும் இந்த ஆண்டின் சிறந்த சலுகைகளை வழங்கும் இணையற்ற அனுபவத்தை வழங்குகிறது. வீடு வாங்க விருப்பம் இருப்பவர்கள் ஒரே இடத்தில் பல டிசைன்களை ஒப்பிட்டு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கான வாய்ப்பை ஃபேர்ப்ரோ 2024 வழங்கியுள்ளது" என்று கூறினார்.

இவரையடுத்து பேசிய கெளரவ விருந்தினரும், CREDAI தமிழ்நாட்டின் தலைவருமான R இளங்கோவன், "CREDAI நம்பகத்தன்மையைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு கோவையின் அடையாளமாக இருந்த வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூட்டு கோபுரத்தை CREDAI புதுப்பித்திருந்தது. இதன் சமூக முயற்சிகள் தொடரும்" என்று பாராட்டினார்.

CREDAI Coimbatore

அடுத்து பேசிய SBI பொது மேலாளர் பிரவேஷ் குமார் சுபுதி, "CREDAI-ன் வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறையை பாராட்டத்தக்கது. இக்கண்காட்சியின் டைடல் ஸ்பான்சராக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வீடுகளை பொதுமக்கள் தேர்ந்தெடுக்கட்டும். அதற்கான கடனை நாங்கள் கொடுக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

இறுதியாக பேசிய தமிழ்நாடு அரசின் நகர மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகத்தின் இயக்குநர் பி.கணேசன், ஐ.ஏ.எஸ், "தமிழக அரசின் முயற்சிகளுக்கு CREDAI கோயம்புத்தூர் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. குறிப்பாக கொரோன பெருந்தொற்று காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகளை ஏற்பாடு செய்திருந்தது.

பொது மக்கள் நலனுக்காக சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் அரசாங்கம் பல சீர்திருத்தங்களை செய்திருக்கிறது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடி வரை கட்டப்படும் கட்டுமானத்துக்கு சுய சான்று அடிப்படையில், ஒற்றை சாளர முறையில், இணையவழி கட்டிட அனுமதி பெறுவதற்ககான அசாரணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதன் மூலம் குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஒரே நாளில் அனுமதி பெற முடியும். இந்த திட்டம் தமிழ்நாட்டை தேசிய அளவில் முன்னோடியாக்கியுள்ளது" என்று கூறினார்.

இறுதியாக CREDAI கோயம்புத்தூர் செயலாளர் எஸ் ஆர் அரவிந்த் குமார் நன்றியுரை ஆற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+