"உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்ளுங்கள்.. ஏன் முக்கியம் தெரியுமா!" புத்தாண்டு வாழ்த்தில் சத்குரு
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், ஈஷா நிறுவனர் சத்குரு இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நாம் உணவில் சிறு தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த புது வருடப் பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 13ஆம் தேதியுடன் சுபகிருது ஆண்டு நிறைவடையும் நிலையில், சோபகிருது ஆண்டு தொடங்குகிறது. இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், பல கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள் இன்று காலையே கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
மேலும், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஈஷா நிறுவனர் சத்குரு தனது வாழ்த்தை வெளியிட்டுள்ளார்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ள அவர், பாரம்பரியமான சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது புத்தாண்டு வாழ்த்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டிற்காக ஈஷா நிறுவனர் சத்குரு பாரம்பரியமான சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி வெளியிட்ட தனது புத்தாண்டு வாழ்த்தில், "'உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். நம் தமிழ்க்கலாச்சாரத்தில், மண்ணை 'தாய் மண்' எனச் சொல்லுகிறோம். ஏனெனில், அந்தக்காலத்திலிருந்தே மண் நம் உயிருக்கு மூலமானது, நம் தாய் போல என்று உணர்ந்து, நாம் பல்லாயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருகிறோம்.
தமிழ் மக்களுக்கு விவசாயத்தில் மிகவும் ஆழமான அனுபவம் உள்ளது. அப்படி இருப்பினும், கடந்த இருபது, முப்பது வருடங்களில் நம் மண்ணைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டோம். நம் மண்ணைக்காக்க, நாம் அனைவரும் கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சிறுதானியங்கள் வளரும் இடத்தின் மண் வளமாகவே இருக்கும்.

மேலும், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை. திறமை என்றால் ஏதோ ஒரு செயல் மட்டும் இல்லை. நாம் வாழும் முறையிலேயே நம் திறமை காட்டப்படவேண்டும். நம் தமிழ் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், எல்லா இடங்களிலும், சித்தர், யோகிகள் என இருந்தனர். உள்நிலையில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதால், ஒரு ஊரை உருவாக்கும் முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்.
பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம். நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும் என்பதாலேயே, தமிழ்நாட்டின் குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம். இதுதான் தமிழ் கலாச்சாரம். இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசியும், வாழ்த்துக்களும்' என்று அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications