விடாது திமுக.. வேலுமணியின் "வலது கை".. புதுக்கோட்டை முருகானந்தன் வீடுகளில் போலீஸ் அதிரடி ரெய்டு
புதுக்கோட்டை முருகானந்தன் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்... ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், மாஜி அடிமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ஆகஸ்ட் 10ந்தேதி நடைபெற்றது... அப்போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தன் வீட்டில் நடந்த ரெய்டில் எதுவுமே சிக்கவில்லை என்று வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.. அதேசமயம், அவரது விட்டில் கைப்பற்றிய ஆவணங்கள், நகைகளை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணியும் தொடர்ந்து நடந்து வந்தது..

சோதனை
அந்த வகையில், வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து செப்டம்பர் 3ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி சென்றனர்.. அதன் விவரங்களை அதிகாரிகள் வெளியிடாத நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமாக இருக்கும் புதுக்கோட்டை முருகானந்தம் என்பவருக்கு தொடர்புடைய சொந்தமான ஷாப்பிங் மால், மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெய்டு
இந்த ஷாப்பிங் மால் புதுக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டு அருகே உள்ளது.. 3 வருடத்துக்கு முன்புதான் இதை வாங்கினார்.. இப்போது அங்கேயும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரெய்டு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

6 இடங்களில் சோதனை
இவரது வீடு மற்றும் அவரது உறவினர்கள், சகோதரர்கள் வீடுகள், ஒப்பந்ததாரர் பழனிவேல், அரசு ஊழியர் ரவிச்சந்திரன் வீடுகள் உள்பட 6 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது...ஊரக வளர்ச்சித்துறை அலுவலராக இருந்து வருபவர் புதுக்கோட்டை முருகானந்தம்.. புதுக்கோட்டை மாவட்டம் வெத்தன்விடுலி கிராமத்தை சேர்ந்தவர்...

புகார்
இவர் ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராக பணிபுரிந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென டிரான்ஸ்ஃபர் தந்ததால், விருப்ப ஓய்வு பெற்றார்.. எனினும், தொடர்ந்து முருகானந்தம், வேலுமணியின் ஆதரவாளராக இருந்து உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் பெற்று பணி செய்து வந்திருக்கிறார். வேலுமணி மீது புகார் எழுந்தபோதே, இவர்மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முருகானந்தத்தின் வீட்டிலும் ரெய்டு நடத்த முடிவானதாக தெரிகிறது..

அதிகாரிகள்
இந்த 5 ஆண்டுகாலத்தில் மட்டும் முருகானந்தத்தின் சொத்து மதிப்பு அதிகப்படியாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. வருமானத்துக்கு அதிகமாக 100% சொத்து சேர்ப்பு மற்றும் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்ப்பு போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்தது லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

சகோதரர்கள்
ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல் இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர்.. இதில் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வருகிறார்.... முருகானந்தம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்... பழனிவேல் ஒப்பந்ததாரராக இருக்கிறார்.. முருகானந்தத்தின் மனைவி காந்திமதி, முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

ஒப்பந்தங்கள்
கடந்த அதிமுக ஆட்சியில், இந்த 3 பேருமே இணைந்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றில், எல்இடி தெரு விளக்குகள் அமைக்கும் பணியை எடுத்து செய்துவந்தனர்... இதைதவிர, அரசு விளம்பர பதாகைகள் வைக்கும் ஒப்பந்தமும் இவர்களுக்கே கிடைத்து வந்துள்ளது.. இதையும் தமிழகம் முழுவதும் செய்து வந்தனர்... எல்லாவற்றிற்கும் மேலாக, முருகானந்தம் தவிர, மற்ற இரு சகோதரர்களும்கூட வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது... ஒரே நேரத்தில் சகோதரர்கள் 3 பேரிடமும் ரெய்டு நடப்பதால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications