ஆன்மீக தயாரிப்புகளில் கால் பதித்த 'காளீஸ்வரி'! தீபம் அகர்பத்திகள் அறிமுகம்
சென்னை: கோல்டு வின்னர் சமையல் எண்ணெய்யை தயாரித்து வரும் காளீஸ்வரி நிறுவனம் தற்போது அகர்பத்திகளை தயாரிக்க தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் ஆன்மீக தயாரிப்புகளில் கால் பதித்திருக்கிறது.
ஆறு வகையான நறுமணங்களில் இந்த அகர்பத்திகள் தயாரிக்கப்படுகின்றன. தீபம் அகர்பத்தி என பெயரிடப்பட்டிருக்கும் இது சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 4ம் தேதி சென்னை சவேரா ஓட்டலில் இதற்கான விழா நடத்தப்பட்டது. இதில் பங்குதாரர்கள், தொழில்துறை பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இந்த தீபம் அகர் பத்தியின் சிறப்பம்சமே புகை, தூசி குறைவாக வெளியேற்றும் தன்மைதான். அதாவது, இதில் சர்கோல் சேர்க்கப்படவில்லை. பொதுவாக அகர்பத்திகளில் சர்கோல் சேர்க்கப்படும். ஆனால் இதிலிருந்து வெளியேறும் புகை மூச்சு திணறலை ஏற்படுத்தும் என்பதால் தீபம் அகர்பத்தியில் இது சேர்க்கப்படவில்லை.
அதேபோல தீபம் அகர்பத்தி நீண்ட நேரம் எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ரோஜா, சந்தனம், லாவெண்டர், பிளாசம், சாம்பிராணி மற்றும் மல்லிகை என 6 வகையான வாசனைகளில் இது கிடைக்கிறது. பிரார்த்தனைக்கும், கோயில், வீடுகள், பூஜை அறைகளில் பயன்படுத்துவதற்கும் ஏற்றார் போல இவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த காளீஸ்வரி நிறுவனத்தின் சிஇஓ பிரேம் குமார் கூறுகையில், "தீபம் அகர்பத்தி மூலம், ஆன்மிகத்துக்கான தயாரிப்புகளை நேர்த்தியாக, தூய்மையாக வழங்கும் நோக்கத்துடன் நாங்கள் இந்த துறையில் நுழைகின்றோம். புதிய துறைக்குள் விரிவடையும் முக்கியமான கட்டம் இது" என்று கூறியிருக்கிறார்.
அதேபோல நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் டைரன் டால் கூறுகையில், "காளீஸ்வரி நிறுவனம் எப்போதும் தரமும், புதுமையும் என்கிற நோக்கத்துடன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்கள் மூலம் நுகர்வோர்களின் தேவைகளை நன்கு புரிந்து கொண்டு, பாரம்பரியத்தையும் நவீனத்தின் நுணுக்கத்தையும் இணைக்கும் தயாரிப்புகளை வழங்குகிறோம்" என்று கூறியுள்ளார்.
இந்த புது தயாரிப்பு, நம்பிக்கைக்கும், நவீனத்துக்கும், பாரம்பரியத்தின் பண்புகளுக்கும் அடையாளமாக இந்திய குடும்பங்களில் இடம்பிடிக்க வழிவகுக்கும் என்று நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications