தமிழகத்தில் தங்களது 18வது புதிய ஷோரூமை திருப்பூரில் திறந்தது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
திருப்பூர்: மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழகத்தில் தனது 18 வது புதிய ஷோரூமை திருப்பூரில் திறந்துள்ளது. இந்த புதிய ஷோரூமை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுப்பராயன் திறந்து வைத்தார்.
உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள உள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது புதிய ஷோரூமை இன்று திருப்பூரில் திறந்துள்ளது.
அதிகமான இட வசதி அதிகமான மாடல்கள் அதிகமான டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுப்பராயன் திறந்து வைத்தார். அவருடன் திரு.யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர்), திரு.சபீர் அலி (மலபார் கோல்டு தமிழ்நாடு மண்டல வணிக தலைவர்), திரு.அமீர் பாபு (மலபார் கோல்டு தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்), திரு.நௌசாத் (மலபார் கோல்டு தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), திரு.சுதீர் அகமது (மலபார் கோல்டு தமிழ்நாடு தெற்கு மண்டல தலைவர்), திரு.ராஜசேகரன் (மலபார் கோல்டு சேலம் கிளை தலைவர்), திரு.பாஹிம் (மலபார் கோல்டு திருப்பூர் கிளை தலைவர்), திரு.அஷரப் (மலபார் கோலடு ஈரோடு கிளை தலைவர்), மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம், பிளாட்டினம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் உள்ளன. மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணி கலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான 'மைன்', பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட 'எரா', மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான 'பிரீசியா 'நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான 'எத்தினிக் ',நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான 'டிவைன்', குழந்தைகளுக்கான நகை தொகுப்பான 'ஸ்டார்லெட் 'ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள்ளது. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 2022 ஆண்டு உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆயத்தமாகிறது அதன்படி இந்தியா மற்றும் வெளி நாடுகளில் ஜனவரி மாதத்திலேயே 22 புதிய ஷோரூம் களை துவங்குகிறது. இந்தியாவில் ஒரு சில்லறை வர்த்தக நிறுவனம் ஒரே மாதத்தில் இந்த அளவில் ஷோரூம் களை துவக்குவது இதுவே முதல் முறையாகும். இதற்காக ஜனவரி 2022 ஆண்டு மட்டும் ரூபாய்.800 கோடி அளவில் முதலீடு செய்கிறது.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி:
நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகை களையும் மட்டுமே விற்பனை செய்கிறது.
அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: முத்துக்குமார் + 91 9344177788.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications