எளிமையானவர்.. ராமநாதபுரம் தொகுதியில் வாக்காளர்களை கவரும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் கவனம் பெறும் வேட்பாளராக அதிமுகவின் ஜெயபெருமாள் மாறி வருகிறார். இதனால் ராமநாதபுரம் தொகுதி பரபரப்பு மிக்க தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகள் கவனம் ஈர்க்கும் வகையில் இருந்து வருகிறது. அந்த வகையில் பரபரப்பு மிக்க தொகுதியில் இணைந்துள்ளது ராமநாதபுரம் தொகுதி.

ஒரு பக்கம் அதிமுக சார்பில் ஜெயபெருமாள் இயல்பானவர், எளிமையானவர் என அத்தொகுதி மக்களால் பெயர் பெற்றவர். இன்னொரு பக்கம் பலாப்பழம் சின்னத்தில் ஓ பன்னீர் செல்வமும், திமுக சார்பாக ஏணி சின்னத்தில் நவாஸ் கனியும் போட்டுகிறார்கள். இவர்கள் இரண்டு பேர் மீதும் ராமநாதபுரம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
காரணம் ஏற்கனவே ஐந்து வருடங்களாக நவாஸ் கனி எதுவும் செய்யவில்லை என்றும், மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது. முழுக்க முழுக்க இஸ்லாமிய வாக்குகளை நம்பி மீண்டும் களமிறங்குகிறார் நவாஸ் கனி. நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காக எதுவும் பேசாததால் இஸ்லாமிய மக்கள் மட்டும் இல்லாமல் பொது மக்களிடமும் ஒரு அதிருப்தி அவர் மீது உள்ளது.
ஓபிஎஸ் பக்கம் பார்க்க போனால் இவர் சொந்த ஊரோ தேனி. ஆனால் போட்டியிடுவதோ ராமநாதபுரத்தில். இதனால் வெற்றி பெற்றுவிட்டு சொந்த ஊருக்கு கிளம்பிடுவாரோ என்ற குழப்பத்தில் உள்ளனர். மக்கள் இன்னும் சொல்லப்போனால் அவர் சமூகத்தை சேர்ந்தவர்களே ஓபிஎஸ் மீது பெரும் அதிருப்தியில் தான் உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் அதிமுகவின் பிரச்சாரம் ராமநாதபுரம் தொகுதியில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் மற்றவர்கள் போல் இல்லாமல் களத்தில் இறங்கி மக்களை சந்தித்தும் அவர்களின் குறைகளை விசாரித்தும் அதன் மூலமாக அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்து மக்களுடன் ஒரு நேரடி கனெக்ட் ஏற்படுத்தும் விதத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் பொதுவாகவே இயல்பானவர், எளிமையானவர் என்பதால் மக்களின் ஆதரவு அவருக்கு பெருகி வருகிறது. நேற்று ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அந்த பகுதியில் இருக்கும் பல பிரச்சனைகளை பற்றி பேசியது மட்டுமில்லாமல் ஸ்டாலின் தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு அவரின் வீடியோவை வைத்தே பதிலடி கொடுத்தது பெருத்த வரவேற்பையும் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனால் அந்தப் பகுதியில் எடப்பாடி பிரச்சாரம் ஒரு பேசும் பொருளாகவே மாறியுள்ளது. எனவே அதிமுக வேட்பாளர் பெருமாளின் இந்த நல்ல இமேஜ் உம் திமுக, ஓபிஎஸ் மேல் உள்ள வெறுப்பும் இணைந்து அதிமுகவுக்கு நல்ல வாக்குகளையும் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகளையும் அமைந்து தரக்கூடிய தொகுதியாக மாறியுள்ளது ராமநாதபுரம்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications