யோகா தினம்: ஜோஷ் - மாஷ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இணைந்த சுவாமி அவ்தேஷானந்த் #YogaForHumanit
டெல்லி: சர்வதேச 8வது யோகா தினத்தை முன்னிட்டு ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (JOSH) மற்றும் பல்வேறு விருதுகள் பெற்ற நிறுவனமான மாஷ் ( MASH Project Foundation) ப்ரொஜெக்ட் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுவாமி அவ்தேஷானந்த் மூலம் #YogaForHumanit என்ற யோகா விழிப்புணர்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது. முன்னாள் ஐஐடி மாணவரும், விருதுகள் பெற்ற தொழில் முனைவருமான அபினவ் டாண்டன் (மாஷ் நிறுவனர்) முன்னெடுப்பில் இந்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதி உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம் யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவில் யோகா தினத்தன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மொத்தம் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 15 ஆயிரம் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 21ம் தேதியை பிரதமர் மோடிதான் சர்வதேச யோகா நாளாக அறிவிக்க ஐநாவில் பரிந்துரை செய்தார்.

தற்போது சர்வதேச அளவில் பிரபலம் அடைந்து வரும் யோகா தினத்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் சுவாமி அவ்தேஷானந்த் மூலம் #YogaForHumanit என்ற யோகா விழிப்புணர்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது,. கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 28ம் தேதி வரை இந்த பிரச்சாரம் நடக்கிறது. பிரபல ஜோஷ் (JOSH) செயலியில் (153 மில்லியன் யூசர்கள்) இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தின்படி ஜோஷ் (JOSH) யூசர்கள் யோகா செய்து வீடியோ வெளியிட வேண்டும். #YogaForHumanity டேக்கின் கீழ் வீடியோ வெளியிடும் அவர்கள் மேலும் 3 பேரை இந்த சவாலுக்கு அழைக்க வேண்டும். இந்த சவாலுக்கு இதுவரை பல பேர் ஆதரவு அளித்த நிலையில், இதுவரை இந்த யோகா வீடியோக்கள் மொத்தம் 650 மில்லியன் பார்வைகளை (ஜூன் 21ம் தேதி வரை) பெற்றுள்ளது. இந்தியர்களை யோகா செய்ய தூண்டும் விதமாகவும், தினசரி வாழ்க்கையில் யோகாவை கடைபிடித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் விதமாகவும், இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வை முன்னெடுத்த சுவாமி அவ்தேஷானந்த் சர்வதேச அளவில் யோகா தொடர்பாகவும், வானிலை மாற்றம், ஒற்றுமை, மனித உரிமைகள் தொடர்பாகவும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்தியாவின் மிக பழமையான சாதுக்களின் மடமான ஜுனா ஆகாராவில் இவர் ஆச்சார்யா மஹாமண்டேஷ்வராக இருக்கிறார். அதேபோல் மத உரிமைகளுக்கான சர்வதேச கவுன்சிலில் இவர் போர்ட் உறுப்பினராகவும் உள்ளார். ஐநாவில் சுவாமி அவ்தேஷானந்த், தலைமைத்துவம் தொடர்பான மாநாட்டில் 2019ல் உரையாற்றி இருக்கிறார். இந்த வருடம் யோகா தினத்தில் நியூயார்க்கில் உள்ள டைம் சதுக்கத்தில் சுவாமி அவ்தேஷானந்த் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்திய தூதரகம் சார்பாக தூதகர அதிகாரி ரன்தீர் ஜெய்ஷ்வால் அழைப்பின் பெயரில் அந்த நிகழ்ச்சியில் சுவாமி அவ்தேஷானந்த் கலந்து கொண்டார். 1000க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிழச்சியில் பேசிய மாஷ் நிறுவனர் அபினவ் டான்டன், சுவாமி அவ்தேஷானந்த் வேதங்களை கற்ற, மனித ஆற்றலை உயர்த்த கூடிய, மக்கள் இடையே நன்மைகளை பரப்பும் சாது. இவர் மூலம் யோகா தினத்தில் #YogaforHumanity என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நாங்கள் மிகப்பெரிய பாக்கியம் செய்து இருக்கிறோம். இவரின் எளிமையாக செயல்கள், எளிமையான யோகாசனங்கள் மூலம் நம் ஆற்றலை உயர்த்த முடியும். ஜோஷ் (Josh), மாஷ் ( Mash Project) இணைந்து நடந்து இந்த பிரச்சாரம் மூலம் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படும். அகஸ்டா ( Agatsa), ராப்ஸ் (Rapz) போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த பிரச்சாரத்தில் பரிசு பங்குதாரர்களாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோஷ் (Josh) நிறுவனத்தின் கிரியேட்டர் மற்றும் கண்டன்ட் ஈகோ சிஸ்ட்ம் பிரிவின் தலைவர் சுந்தர் வெங்கட்ராமன் பேசுகையில், நம்முடைய ஆரோக்கியத்தை, நல்ல உடல் நலனை பாதுகாப்பது நம்முடைய கடமை. இதற்கு யோகா உதவியாக இருக்கும். தினமும் யோகா செய்வதன் மூலம் நம்முடைய உடல் நலனை பேண முடியும். இதற்காக மாஷ் பவுண்டேஷன், சுவாமி அவ்தேஷானந்த் ஆகியோருடன் இணைந்து இந்த #YogaForHumanity பிரச்சாரத்தை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். இது நமது வாழ்க்கை முறையையே மாற்றும் பிரச்சாரம் ஆகும். இந்த பிரச்சாரத்தில் பங்கெடுத்ததற்காக சுவாமி அவ்தேஷானந்தவிற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரச்சாரம் மூலம் புதிய விழிப்புணர்வு இணையத்தில் ஏற்படும் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்த பிரச்சாரம் மூலம், சுவாமி அவ்தேஷானந்த் மக்கள் இடையே யோகாவை கொண்டு செல்லவும், அதன் பயன்களை கொண்டு செல்லவும், 2,3, 4 டயர் நகரங்களுக்கும் யோகாவை கொண்டு செல்லவும் முயன்று வருகிறார். இதன் காரணமாகவே ஜோஷ் (josh) போன்ற குறு வீடியோ செயலியில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாஷ் ப்ரோஜெக்ட் பவுண்டேஷன் (MASH Project Foundation)
மாஷ் ப்ரோஜெக்ட் பவுண்டேஷன் (MASH Project Foundation) என்பது பல்வேறு விருதுகளை பெற்ற ஒரு social enterprise நிறுவனம் ஆகும். சிவில் சமூக அமைப்புகள், பெருநிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற அமைப்புகளுடன் இணைந்து சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த நிறுவனம் உழைத்து வருகிறது.
ஜோஷ் (Josh):
ஜோஷ் என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஷார்ட் வீடியோ செயலி ஆகும். ஆகஸ்ட் 2020ல் வெர்சே இன்னோவேஷன் (VerSe Innovation.) நிறுவனம் மூலம் இந்த செயலி வெளியிடப்பட்டது. இந்தியாவின் 1000+ சிறந்த கிரியேட்டர்கள், 20000க்கும் அதிகமான கம்யூனிட்டி கிரியேட்டர்கள், 10 பெரிய இசை ஆல்பங்கள், 15 மில்லியனுக்கும் அதிகமான யுஜிசி கிரியேட்டர்கள், சிறந்த கன்டென்ட் கிரியேட்டிங் டூல்ஸ், மிக சிறப்பான யூசர் டெமோகிராபிக்ஸ் ஆகியவை இந்த செயலியின் சிறப்பம்சம் ஆகும். இந்தியாவின் நம்பர் 1 ஷார்ட் வீடியோ செயலியாக இது செயல்பட்டு வருகிறது. மொத்தம் ப்ளே ஸ்டோரில் 100 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களை இந்த செயலி கொண்டுள்ளது. இந்தியாவில் வேகமாக முன்னேறும் செயலியாக் இது உள்ளது. ஓரு வருட ஆக்டிவ் யூசர் 153 மில்லியன் என்ற அளவிலும், தினசரி யூசர்கள் 74 மில்லியன் என்ற அளவிலும், 23 நிமிட தினசரி நேரம் செலவழிப்பு என்ற அளவிலும் இந்த செயலி வளர்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications