"சன்ஸ்கிருதி சமாகம்"- பாரம்பரியமும் தொழில்நுட்பமும்! VIT போபால் பல்கலைக்கழகம் வழங்கிய அபூர்வ அனுபவம்
சென்னை: இந்தியாவின் பண்பாட்டுப் பெருமையையும் நவீனத் தொழில்நுட்பப் புதுமைகளையும் ஒரே மேடையில் இணைத்துச் சிறப்பித்த ஒரு வரலாற்று நிகழ்வாக, வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகத்தின் "சன்ஸ்கிருதி சமாகம்" எனும் தனித்துவமான கலாச்சார விழாவைச் சிறப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்தது.
இதுவரை நடைபெறாத முதன்மையான ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் இந்தியப் பாரம்பரியக் கலை வடிவங்களின் அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்த விழா, அக்டோபர் 11, சனிக்கிழமை அன்று, மத்தியப் பிரதேசத்தில் போபாலின் ஆவிரிதி, இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மனவ் சங்க்ரஹாலயா, ஷ்யாம்லா ஹில்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் பத்ம விபூஷண் டாக்டர் சோனல் மான்சிங், ஜாசு கான், அனன்யா சக்ரவர்த்தி, மற்றும் வர்ஷிணி சங்கர் ஆகியோர் தங்கள் கலைநிகழ்ச்சிகளின் மூலம் இந்தியப் பண்பாட்டை மெய்மறக்கச் செய்தனர்.
மாலையில் முக்கிய அம்சமாக, மாநிலத்தில் இதுவரை காணப்படாத அளவுக்கு மின்னும் வண்ணமயமான மின்விமானம் (Drone) காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடம் முழுவதும் பசுமையும் மரங்களும் மற்றும் மலர்களால் எழில் கொண்டு சூழப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஏரிக்கரையைச் சுற்றி வானில் ஒளி மற்றும் ஒத்திசைவு மிகுந்த பல்வேறு விதமான காட்சிகளை உருவாக்கி. இதில் வியத்தகு காட்சிகளாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருவம் மத்திய பிரதேசத்தின் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் உருவம், மற்றும் மாநிலத்தின் ஆட்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி முக்கிய வளர்ச்சி முயற்சிகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தின.
இந்த ட்ரோன் நிகழ்ச்சி, வி.ஐ.டி. போபால் கல்வித் துறையில் வழங்கும் முக்கிய பங்களிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியது. "ஆத்மநிர்பர் பாரத்" என்ற நாட்டின் சுய நிறைவு நோக்கத்துடன் இணைந்து, எதிர்காலத்துக்குத் தயாரான, தொழில்நுட்பத் திறனுடன் கூடிய மத்தியப் பிரதேசத்தை உருவாக்கும் நிறுவனமாக வி.ஐ.டி. போபால் தன்னை மீண்டும் நிரூபித்தது.
இந்நிகழ்வை, வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், அறக்கட்டளை உறுப்பினர் ரமணி பாலசுந்தரம், மற்றும் புதுமணத்தம்பதிகள் திருமதி காதம்பரி ச விசுவநாதன் (உதவி துணைத் தலைவர், வி.ஐ.டி.) மற்றும் டாக்டர் ஏ. ஸ்ரவண் கிருஷ்ணா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மாநிலம் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், நிர்வாக மற்றும் கல்வித்துறையின் பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
"சன்ஸ்கிருதி சமாகம்" மத்தியப் பிரதேசத்திற்கான ஒரு பண்பாட்டு மைல்கல் நிகழ்வாக அமைந்தது - பாரம்பரியத்தின் ஆன்மாவையும், தொழில்நுட்பத்தின் ஒளியையும் ஒருங்கிணைத்து மறக்க முடியாத ஒரு இரவை உருவாக்கியது. இந்தியாவின் வேர்களையும் அதன் எதிர்காலக் கனவுகளையும் இணைக்கும் பாலமாக, வி.ஐ.டி. போபால் மீண்டும் ஒரு முறை தன் முன்னணித் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது.
சன்ஸ்கிருதி சமாகம்" பாரம்பரியமும் தொழில்நுட்பமும் சங்கமித்த இந்த வரலாற்று விழாவில் முக்கிய விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு, விழாவைச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications