உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிடுச்சா! கெட்டியாக சூப்பர் டிப்ஸ்!
சென்னை: உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது தவறுதலாக நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டீர்களா? அதை எப்படி சரி செய்வது? தண்ணீர் நிறைய இருந்தால் மாவு எண்ணெய்யை குடிக்குமே! இனி அந்த கவலை வேண்டாம்.
வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் மசால் வடையை விட உளுந்து வடையை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். உளுந்து வடை நன்றாக புசுபுசு என உப்பி சாப்பிடவே சுவையாக இருக்கும்.

உளுந்து மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து செய்வது ஒரு விதம். அதே உளுந்து மாவில் வெங்காயம், பச்சை மிளகாயிற்கு பதில் வெறும் மிளகை முழுசாகவோ இல்லை நுணுக்கியோ போட்டு வடை சுடுவது இன்னொரு விதம்.
இரண்டுமே சுவைதான். கடலை பருப்பு வடைக்கு மாவு அரைக்கும் போது பருப்பை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதில் இஞ்சி, பூண்டு, சோம்பு, ஒரு துண்டு பட்டை, இரு கிராம்பு சேர்த்து அரைத்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, பெருங்காயம் சேர்த்து வடை செய்யலாம்.
ஆனால் உளுந்து வடைக்கு மாவு அரைப்பது என்பது பக்குவமிருக்கிறது. உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வடிகட்டி கிரைண்டரிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை வெண்ணெய் போல் உருண்டு வரும்.
அப்போது அதற்கு நிறைய தண்ணீரையும் ஊற்றிவிடக் கூடாது. தண்ணீர் நிறைய இருந்தால் வடை வராது, போண்டாதான் வரும். அதிலும் எண்ணெய் அதிகமாக இழுக்கும். இதனால்தான் உளுந்து வடை போடும் போது கவனமாக அரைக்க வேண்டும்.
சிலர் ஐஸ் தண்ணீரை தெளித்து தெளித்து அரைப்பார்கள். ஒரு வேளை தண்ணீர் தெளிக்கும் போது தவறுதலாக நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டால் என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வேளை தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் மாவு கெட்டியாகிவிடும். இல்லாவிட்டால் ஒரு கப் அரிசி மாவையும் சேர்க்கலாம். சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்தால் மாவு சிறிதளவு கெட்டியாகும். எனவே இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி வடைக்கு மாவு அரையுங்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications