மொறுமொறு கோதுமை தோசையும் தக்காளி சட்னியும்! டின்னருக்கு தாறுமாறான காம்போ, இப்படி செய்யுங்க!
Crispy Wheat Dosa With Tomato Chutney Recipe In Tamil: இரவு நேரத்தில் என்ன சமைப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? எப்போதும் போல இட்லி, தோசை சாப்பிட்டு சலித்துவிட்டதா? ஆரோக்கியமாகவும் அதே சமயம் பத்தே நிமிடத்தில் ஒரு சூப்பரான டின்னர் செய்ய விரும்பினால் இந்த கோதுமை தோசை மற்றும் தக்காளி சட்னி காம்போ உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த கோதுமை தோசை செய்வதற்கு மாவு புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் சேர்க்கப்படும் அரிசி மாவு மற்றும் ரவை, தோசைக்கு நல்ல மொறுமொறுப்பைத் தரும். நார்சத்து நிறைந்த கோதுமை மாவு உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன் செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இதனுடன் காரசாரமான தக்காளி சட்னி சேர்த்து சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான்.

வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே ஹோட்டல் சுவையில் இந்த காம்போவை நீங்கள் தயார் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று கீழே விரிவாகப் பார்ப்போம். இந்த எளிய செய்முறையைப் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
தோசை செய்ய:
- கோதுமை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- ரவை - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
- கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
- உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு
தக்காளி சட்னி அரைப்பதற்கு...
- தக்காளி - 3 (பெரியது)
- பெரிய வெங்காயம் - 2
- பூண்டு - 5 பற்கள்
- வரமிளகாய் - 4 முதல் 5
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு, உளுந்தம்பருப்பு - தாளிக்க
செய்முறை விளக்கம்
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் ரவையை எடுத்துக் கொள்ளவும். பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்து இதில் சிறுகச் சிறுகத் தண்ணீர் ஊற்றி ரவை தோசை பதத்திற்கு மிகவும் மெல்லியதாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மாவில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறவும். இந்த மாவு குறைந்தது 10 நிமிடங்கள் அப்படியே ஊறட்டும். அடுத்து சட்னி செய்ய ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, வரமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவும். பின் ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு சிறிய கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து சட்னியில் கொட்டினால் சுவையான தக்காளி சட்னி தயார்.
இறுதியாக அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். கல் நன்கு சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவை ஓரங்களில் இருந்து நடுப்பகுதி வரை மெல்லியதாக ஊற்றவும். பின் தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போடத் தேவையில்லை.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications