ஆரஞ்சு தோலில் சூப்பரான காரக் குழம்பு செய்யலாம்! எப்படி தெரியுமா?
சென்னை: ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி போடாமல் அதில் ஒரு சூப்பரான காரக் குழம்பு வைக்கலாம். அது போல் அந்த தோலை காய வைத்து சீயக்காய் அரைக்கவும் கொடுக்கலாம்.
ஆரஞ்சு பழத் தோல், மாங்கொட்டை உள்ளிட்டவைகளை வைத்து ருசியான காரக் குழம்பு செய்யலாம். ஆரஞ்சு பழம் கோடைக் காலங்களில் எளிதில் கிடைக்கும். தற்போதும் அந்த பழம் கிடைக்கும்.

பழத்தை வாங்கினால் அதை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் ஆரஞ்சு பழத் தோலை வைத்து காரக் குழம்பு செய்தால் அது 10 நாட்களானாலும் கெட்டு போகாது. இட்லி, தோசை, சப்பாத்தி, உள்ளிட்டவைகளுக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையோ சுவை. இந்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழத் தோல்- அரை கப்
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம்- அரை கப்
தக்காள்- 1
பூண்டு - 15 பல்
நல்லெண்ணெய் - 100 மில்லி,
கடுகு- அரை ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்,
தனியா- 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
புளி - சிறிதளவு
வெல்லம்- அரை ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
பச்சரிசி - அரை ஸ்பூன்
கடலை பருப்பு- 2 ஸ்பூன்
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- 2 சிட்டிகை
செய்முறை
வெறும் வாணலியை சூடு செய்து அதில் கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, தனியா, அரிசி போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
பின்னர் அதே கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயையும் வறுத்துவிடுங்கள்
எல்லாவற்றையும் ஆற வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு பழ தோலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளுங்கள்
அடிகனமான பாத்திரம் அல்லது மண் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிய விடவும், பிறகு கறிவேப்பிலை, பூண்டு போட்டு, வெங்காயத்தையும் போட வேண்டும்.
அது நன்றக வதங்கியதும் ஆரஞ்சு தோலை போட்டு வதக்குங்கள். பின்னர் தக்காளி போட்டு வதக்கி விடவும்
இரண்டு நிமிடங்கள் வதக்கியதும் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து புளி கரைசலை விட்டு கொதிக்கவிடவும்
புளி பச்சை வாடை போனதும் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளறிவிட்டு கொதிக்கவிடுங்கள். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வெல்லத்தை போட்டு சேர்க்க வேண்டும். இதை சூடான சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அல்டிமேட் சுவை!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications