Aviyal Recipe in Tamil: அடைக்கு ஏற்ற அவியல்! செய்வது எப்படினு பார்க்கலாமா? அப்படியே சாப்பிடலாமே!
Aviyal recipe: எல்லா காய்கறிகளையும் போட்டு அவியலை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதை அப்படியே சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.
தமிழகம், கேரளாவில் அவியல் அடிக்கடி செய்யப்படும். அடைக்கு தொட்டுக் கொள்ளவும், வீட்டு விசேஷங்களிலும், பொங்கல் காலத்திலும் இந்த அவியல் செய்வதுண்டு.

சிலர் காய்கறிகள் எல்லாம் தீர்ந்து போனதும் புதிதாக காய்கறிகளை வாங்கும் முன்பு பிரிட்ஜில் என்ன இருக்கிறது என பார்ப்பார்கள். அப்போது எந்தெந்த காய்கறிகள் எல்லாம் ஒன்று, இரண்டு என மீந்துள்ளதோ அதை எடுத்து போட்டு அவியல் வைத்து அசத்துவார்கள்.
அவியல் வைத்தால் வீடே கமகமக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம் வைத்தால் தொட்டுக் கொள்ளலாம். காரக்குழம்பு உள்ளிட்டவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதற்குத்தான் தொட்டுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை. நம் இஷ்டம்தான். சரி இந்த அவியலை எப்படி செய்வது என பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய்- 2
உருளைக் கிழங்கு- 2
முருங்கைக் காய்- 1
வள்ளிக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
பீன்ஸ், கேரட்- தலா ஒரு கப்
அவரைக்காய்- அரை கப்
பூசணிக்காய்- 50 கிராம்
சௌசௌ- 25 கிராம்
பச்சை மொச்சை- 250 கிராம்
தேங்காய்
சீரகம்- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்- சிறிதளவு
தயிர்- 100 மில்லி (கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பல்ஸ் மோடில் தயிரின் கட்டிகளை நீக்கி நைஸாக்கவும்)
இந்த அளவுகளில் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் எதுவோ அதை கூட்டிக் கொள்ளலாம்.
செய்முறை
மேலே சொன்ன காய்கறிகளை குக்கரில் வேக வைப்பதால், அவற்றை கழுவி, பெரிய பெரிய சைஸில் நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் அவற்றை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
பச்சை மொச்சையில் தனியே சுடுநீரில் வேக வைக்கவும்.
காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து சேர்க்கவும். பின்னர் காய்கறி, அரைத்த விழுதை நன்கு கலக்கி சற்று கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அவை ஆறியதும், அதில் அடித்து வைத்த தயிரை சேர்த்துவிடவும்.
தேங்காய் எண்ணெய்யை காய வைத்து அதில் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும் அவியல் கலவையில் கொட்டி கலந்து விடவும். இந்த அவியல் கூட்டு போல் சற்று கெட்டியாக இருக்க வேண்டும். இதில் தேவைப்பட்டால் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கலாம்.
சிலர் மோர் சேர்க்காமல் அவியல் செய்வார்கள். இன்னும் சிலர் தேங்காய் அரைக்கும் போது அதில் சிறிது இஞ்சியையும் சேர்ப்பார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications