உடைத்த தேங்காய் நிறம் மாறாமல் இருக்க ஒரு சூப்பர் டிப்ஸ்! அப்படியே ஃபிரஷ்ஷாக இருக்கும்!
How to keep the broken coconut as fresh: தேங்காயை உடைத்தால் அதில் ஒரு மூடியை பயன்படுத்திவிட்டு மறு மூடியை பிரிட்ஜில் வைத்தாலும் அது நிறம் மாறியிருக்கும். அதை மீண்டும் பயன்படுத்துவதற்கும் சற்று அச்சமாக இருக்கும். இதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் பார்க்கலாம்.

வீடுகளில் சாமி கும்பிடுவதற்கு தேங்காய் உடைத்தால் அந்த தேங்காயில் ஒரு மூடியில் சட்னி அரைத்துவிட்டு மறு மூடியை கவரில் வைத்து பிரிட்ஜில் வைத்து விடுவோம்.
பிறகு 3 நாட்கள் கழித்து அந்த தேங்காயை எடுத்து பார்த்தால், அதன் ஓரங்களில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளேவும் ஏதோ அழுக்கானது போல் இருக்கும். இதை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்போம்.
உடனே அதை தூக்கிவீசிவிட்டு வேறு தேங்காயை உடைத்து அதை பயன்படுத்துவோம். மீதியுள்ள அரை மூடியை எடுத்து மீண்டும் அதே போல் வைப்போம். அதுவும் பழைய மாதிரியே ஆகிவிடும். ஆக ஒவ்வொரு முறையும் அரை மூடி தேங்காயை தூக்கி எறியும் நிலை ஏற்படும்.
இதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் பார்க்கலாம். அதாவது இது நான் பயன்படுத்தி பலனடைந்ததால் சொல்கிறேன். அரை மூடி தேங்காயை பயன்படுத்திவிட்டு மீதமுள்ள அரைமூடி தேங்காயின் வெள்ளை நிற பகுதிகளில் ஓரங்களிலும் மைய பகுதிகளிலும் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து ஒரு கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் போதும். அதிகபட்சம் 5 நாட்களாவது அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இதை பயன்படுத்திவிட்டு எப்படி இருந்தது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications