Kollu Chutney Recipe: கொங்குநாட்டு ஸ்பெஷல் கொள்ளு பருப்பு சட்னி செய்வது எப்படி?
Kollu Chutney Recipe: குழம்பு வகைகள், சாம்பார், ரசம் என எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா.. சத்து நிறைந்த மணமணக்கும் இந்த கொள்ளு சட்னியை ட்ரை செய்து பாருங்கள்.
இளைத்தவனுக்கு எள்ளு,கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் குறைப்புக்கு கொள்ளு பருப்பு முக்கியப் பங்காற்றுகிறது. கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். உடல் குறைப்புக்கு மட்டுமல்லாமல் பல்வேறு சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. செரிமான மண்டலத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைப் போக்கும்.

கொள்ளுப் பருப்பு ரசம், கொள்ளு சூப் போன்றவை குடிப்பதன் மூலம் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். கொள்ளு ஊற வைத்த நீரை குடித்தால் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவும். கொள்ளு பருப்பில் அதிகளவிலான மாவுச் சத்து உள்ளது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த கொள்ளுப் பருப்பை சட்னி செய்து தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால் அத்தனை ருசியாக இருக்கும். வாங்க கொள்ளுச் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1/2 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
வரக்கொத்தமல்லி - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 3
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள்
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை
செய்முறை
1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வரக்கொத்தமல்லி, சீரகம், மிளகு அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர், வரமிளாகயைப் போட்டு வதக்கவும்.
2. பின்னர், சின்ன வெங்காயத்துடன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
3. கொள்ளு பருப்பை நன்றாக வறுத்து, பிரஷர் குக்கரில் 5 முதல் 6 விசில் விட்டு இறக்கவும்.
4. தாளித்த பொருள்களை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
5. அதில் வேகவைத்த கொள்ளையும் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில் பூண்டு மற்றும் கருவேப்பிலையை பச்சையாகப் போட்டு அரைத்து எடுக்கவும். சுவையான கொள்ளுச் சட்னி ரெடி.
இந்தச் சட்னியை சூடான சாதத்துடன் போட்டு நெய் அல்லது தேங்காய் எண்ணெயை சிறிதளவு சேர்த்து நன்கு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications