Poondu Chutney Recipe: கமகமக்கும் காரசாரமான பூண்டு சட்னி.. 10 நிமிஷத்தில் ரெடி பண்ணிடலாம்
How to make Garlic chutney: எப்போதும் சட்னி, சாம்பார் என்று சாப்பிட்டு சலித்துப் போன உங்கள் குடும்பத்தினருக்கு, இட்லி, சட்னி, சப்பாத்தி என அனைத்து வகை உணவுகளுக்கும் பக்கா காம்பினேஷனாக இருக்கும் இந்த பூண்டு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்திய உணவுகளில் பூண்டு தவிர்க்க முடியாத ஒன்றாகும். பூண்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில், விட்டமின் பி, சி, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தம் குறையும். ஆற்றலை அதிகரிக்கும். எடை இழப்பிற்கு பூண்டு முக்கியப் பங்காற்றி வருகிறது. இதய ஆரோக்கியத்தில் பூண்டின் பங்கு அளப்பரியதாகும்.

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது நன்மை பயக்கும். இல்லையெனில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு சைடிஸாக பூண்டு சட்னி செய்தும் பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ருசி மிகுந்த பூண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை
நல்லெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் - 50 கிராம்
வரமிளகாய் - 5
புளி - சிறிதளவு
கடுகு - கால் சடேபிள் ஸ்பூன்
உளுந்து - கால் டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பூண்டு சட்னி செய்வது எப்படி?
அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
2. பின்னர், சின்னவெங்காயம், பூண்டு பற்களை சேர்த்து இரண்டு நிமிடம் பொன்னிறமாக வதக்கி ஆறவிடவும்.
3. வதக்கிய கலவை ஆறிய பின்னர் அதில் உப்பு மற்றும் புளி சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
4. மீண்டும் கடாயை சூடாக்கி அதில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பின்னர், அரைத்த பூண்டு விழுதை சேர்த்து கிளறவும்
5. சட்னியில் இருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கினால் காரசாரமான கமகமக்கும் பூண்டு சட்னி தயார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications