விரத நாட்களில் குழம்பு, ரசத்தில் உப்பு போட்டோமா இல்லையா? குடித்து பார்க்காமல் கண்டுபிடிக்க டிப்ஸ்!
சென்னை: குழம்பு, ரசம் செய்யும் போது சிலருக்கு உப்பு போட்டோமா இல்லையா என்ற சந்தேகம் எழும். சாதாரண நாட்களில் சுவைத்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பண்டிகை , விரத நாட்களில் அது சாத்தியப்படாது. எனவே குழம்பு, ரசத்தில் உப்பு போட்டோமா என்பதை அறிய எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்.
சமையல் பழகுபவர்களுக்கும் சரி நீண்ட காலமாக சமைப்போருக்கும் சரி குழம்பு, ரசத்தில் உப்பு போட்டோமா என்பது சந்தேகமாக இருக்கும். பல சமயங்களில் குழம்பு, ரசத்தை வாயில் சிறிது விட்டு பார்த்தால் தெரிந்து விடும்.

ஆனால் பண்டிகை, விரதம், சுவாமிக்கு படையல் செய்யும் நாட்களில் என்ன செய்வது? உப்பில்லா பண்டம் குப்பையிலே! என்ற சொலவடை உண்டு. உப்பு இல்லாவிட்டாலும் சாப்பிட முடியாது, அதிக உப்பு போட்டுவிட்டாலும் அந்த உணவை குப்பையில்தான் போட வேண்டும்.
எனவே குடித்தே பார்க்காமல் எப்படி கண்டறிவது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது குழம்பு, ரசம் எதுவாக இருந்தாலும் நுரையுடன் நடுவில் கொதித்தால் உப்பு போட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். இதே ஓரத்தில் மட்டும் கொதித்தால் உப்பு போடவில்லை என்று அர்த்தம்.
இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வேளை குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என்பதையும் பார்க்கலாம். தயிர் சேர்த்தால் உப்புத்தன்மை கட்டுப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் சாம்பார், ரசத்தில் எப்படி தயிர் ஊற்றுவது?
எலுமிச்சை சாற்றை பிழிந்தாலும் அதிகபடியான உப்பு சுவையை குறைத்துவிடும் என்கிறார்கள். உருளைக்கிழங்கை கட் செய்து கொதிக்க விட்டு பிறகு அந்த உருளை கிழங்கை வெளியே எடுத்துவிடலாம் என்கிறார்கள்.
குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்றவைகளில் உப்பு அதிகமாகிவிட்டால் வெங்காயம், கசகசா, தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொட்டினால் உப்பு குறையும் என்கிறார்கள்.
ரசத்தில் உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ரசத்தை கொதிக்கவிட்டு அதில் கூடுதலாக ரசப் பொடியை தூவி அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் போதும் என்கிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications