ரேஷன் புழுங்கல் அரிசி, துவரம் பருப்பை வைத்து சூப்பரான அடை செய்யலாமா? இதுதான் Measurement!
How to prepare Adai: எப்ப பார்த்தாலும் இட்லி, தோசைதானான்னு கேட்போருக்கு கார அடை செய்து கொடுத்து அசத்துங்க! இந்த சிற்றுண்டியை ஒவ்வொருவர் ஒவ்வொரு அளவுகளில் போட்டு செய்வார்கள். அதிலும் ரேஷன் அரிசி, பருப்பை வைத்து எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
இட்லி, தோசை, உப்புமா செய்து போர் அடித்துவிட்டதா? இந்த கார அடை செய்து பாருங்கள். இது பெரும்பாலானோருக்கு செய்யத் தெரியும். இருந்தாலும் எனக்கு தெரிந்த இந்த செய்முறையை உங்களுக்கு சொல்கிறேன்.

அதிலும் ரேஷன் அரிசி, ரேஷன் துவரம் பருப்பு போதும். இந்த அடை செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரேஷன் புழுங்கல் அரிசி - 2 கப்
ரேஷன் துவரம் பருப்பு- ஒன்றரை கப்
கடலை பருப்பு- கால் கப்புக்கும் குறைவு
காய்ந்த மிளகாய்- 8 முதல் 10
பூண்டு- தோலுடன் 15 பல்
செய்முறை
ரேஷன் அரிசியையும் பருப்புகளையும் நன்கு 4 அல்லது 5 முறை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மிளகாயையும் அதனுடனே சேர்த்து ஊறவைத்துவிடுங்கள்.
3 மணி நேரம் கழித்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவை வழிப்பதற்கு முன்னர் மிளகாயையும் பூண்டையும் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் சில மணி நேரம் புளிக்க வைத்துவிட்டு காலையிலோ இரவிலோ அதில் சிறிது மஞ்சள் தூள், சீரகம், பெருங்காயத் தூள் போட்டு தோசைக் கல்லில் சற்று கனமாக இரு பக்கமும் நன்கு எண்ணெய் ஊற்றி வேக வைத்து பரிமாறவும். இதற்கு அவியல், இட்லி மிளகாய் பொடி, தேங்காய் சட்னி, கார சட்னி செம காம்பினேஷனாக இருக்கும். சிலர் அவியலுடன் வெல்லத்தையும் சேர்த்து சாப்பிடுவார்கள். சிலர் அடைக்கு தொட்டுக் கொள்ள ஏதும் இல்லாமல் அப்படியே சாப்பிடுவார்கள். அது அவரவர் விருப்பம்.
இந்த அடை எங்களுக்கே செய்ய தெரியுமே, இதில் என்ன புதுசு இருக்கிறது என நினைக்காதீர்கள். இது சிம்பிள் மெத்தடு! அதிலும் ரேஷன் அரிசி, பருப்பில் செய்யலாம். நிறைய பொருட்களை போட தேவையில்லை. நன்கு வாசனையாக இருக்கும். சிலர் அடை மாவை கடைகளில் வாங்கி செய்வார்கள். அதற்கு பதில் நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதற்கானதுதான் இந்த தகவல்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications