Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சு மிட்டாய் லேப் ரிசல்ட் சொல்வது என்ன? அதிகாரி வெளியிட்ட ‘ஷாக்’ ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை உணவுப் பகுப்பாய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நடத்தப்பட்ட சோதனையில் ஆரஞ்சு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களில் நஞ்சு தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் கலந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே புதுச்சேரியில் யாரும் பஞ்சு மிட்டாய் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

Food officer released cotton candy lab result

புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் கலர் பொடியான Rhodamine B என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டது உறுதியானது. இது புற்றுநோய் போன்ற ஆபத்தை வரவழைக்கும் நஞ்சு பொருள் என்று அதிகாரிகள் 'அலர்ட்' மணியை அடித்து எச்சரிக்கை செய்தனர்.

அதனையடுத்து சில நாள்கள் முன்னர் தமிழ்நாட்டிலும் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை மெரினா கடற்கரை மட்டும் பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Food officer released cotton candy lab result

மேலும் இதை விற்கும் வடநாட்டு இளைஞர்களின் முகவரி, அவர்கள் இதைத் தயாரிப்பதற்காக வாங்கும் மூலப் பொருள்களின் கடைகள் முகவரி எனப் பலவிதமான விவரங்களைச் சேகரித்தனர்.

அதன்பின் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் பொட்டலங்களை உணவுப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர் அதிகாரிகள். அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

Food officer released cotton candy lab result

புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களைப் போலவே சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட மிட்டாய்களிலும் அதே வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைவிட வேறு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் ஆய்வில் கிடைத்துள்ளன.

அது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

Food officer released cotton candy lab result

"உணவுப் பகுப்பாய்வு சோதனைக்காக அனுப்பி இருந்தோம். அதன் சோதனை முடிவுகள் இப்போது கிடைத்துள்ளன. அதில் Rhodamine பாசிடிவ் B என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. Rhodamine B ஒருவிதமான தலையில் அடிக்கும் 'டை' போன்றது.

இது இல்லாமல் அந்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாத சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கலர் பொடி கலந்த பஞ்சுமிட்டாயைக் குழந்தைகள் மட்டுமல்ல; யாருமே உட்கொள்ளக் கூடாது. மிகமிக ஆபத்தான வேதிப்பொருள் அது.

Food officer released cotton candy lab result

இதை உட்கொண்டால் கிட்னி, கல்லீரல், வயிறு ஆகிய பகுதிகளில்தான் அந்த வேதிப்பொருளின் கசடுகள் போய் தங்கும். அப்படியே வெளியேறாமல் குறைந்தது 70 நாள்கள் அங்கே தங்கிவிடும். உடலுக்குள் ஒரே இடத்தில் இத்தனை நாள்கள் தங்கி இருப்பதால், அது வேதிவினை புரிந்து, அங்கே உள்ள திசுக்களைத் தின்றுவிடும்.

அதனால் அந்தப் பகுதிகளில் புண் ஏற்படும். அது கிட்னியில் தங்கி இருந்தால், கிட்னி செயலிழந்துவிடும். கல்லீரலில் தங்கி இருக்கும்போது அதன் செல்கள் செயலிழந்து அதுவும் பாதிக்கப்படும்.

Food officer released cotton candy lab result

ஒரு குழந்தை இதைத் தொடர்ந்து சாப்பிடும்போது வயிற்றுப் பகுதியில் அது புண்ணாகி, நாளடைவில் அது புற்றுநோயாக மாறும். ஆகவே இந்தப் பஞ்சு மிட்டாயைக் குழந்தைகள் உட்பட யாரும் உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்கிறார்.

Food officer released cotton candy lab result

ஆய்வின் முடிவுகள் கைக்குக் கிடைத்துவிட்டன. அதனடிப்படையில் புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய்க்குத் தடைவிதித்துள்ளதைப் போல் தமிழ்நாடு அரசும் அதற்குத் தடை விதிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Food officer released cotton candy lab result

இந்த Rhodamine B என்ற வேதிப்பொருளானது ஜவுளித் தொழிலில் ஆடைகளுக்குச் சாயம் ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டும் ஒரு விதமான வேதிப்பொருள்.

Food officer released cotton candy lab result

அப்படிச் சாயப்பட்டறைகள் போன்றவற்றில் கலக்கப்படும் இந்த நஞ்சு சாயக் கழிவுகளாக ஆற்றில் கலந்து வருவதால் மீன்கள் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் ஆற்று நீரும் நஞ்சாகி வருகிறது. அதை எதிர்த்துத்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றன.

Food officer released cotton candy lab result

இத்தனைக் காலம் பஞ்சு மிட்டாய் என்று நம்பி நம் குழந்தைகளுக்கு நாம் நஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்துள்ளோம். இது எவ்வளவு பெரிய அறியாமை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+