பச்சைப் பட்டுடன் வைகையில் இறங்கினார் கள்ளழகர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இன்று காலை திருக் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கினார்.

பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வந்த கள்ளளழகர் காலை 7.05 மணிக்கு ஆற்றில் இரங்கினார்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் கிளைமாக்ஸ் நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை காலைமதுரையில் கோலாகலமாக நடந்தேறியது. லட்சோப லட்சம் மக்கள் வைகை ஆற்றின் இரு கரைகள் மற்றும் ஆற்றுக்குள்குழுமியிருக்க அவர்கள் முன்னிலையில் கள்ளழகப் பெருமான் வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார்.

தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையிலிருந்து கள்ளழகர் கோலம் பூண்டு மதுரை வருகிறார் அழகர். ஆனால்அவர் வருவதற்குள் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முடிந்து விடுகிறது.

இதனால் கோபமடைந்த எம்பெருமான் நகருக்குளேயே வராமல் ஆற்றோரமாகவே அழகர் மலைக்குத் திரும்பி விடுகிறார்.இதுதான் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கான பின்னணி.

வெள்ளிக்கிழமை அழகர் மலையிலிருந்து கிளம்பிய கள்ளழகர் வழியெங்கும் மக்களின் வரவேற்பைப் பெற்றவாறு மாலையில்மதுரை வந்து சேர்ந்தார். வழியெங்கும் பல்வேறு ஊர்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் சில நிமிடங்கள் தங்கிபக்தர்களுக்கு சுவாமி அருள பாலித்தார்.

பின்னர் நேற்றிரவு மதுரை தல்லாகுளம் வந்தார். அங்கு எதிர்சேவை என்ற பெயல் மதுரை மக்கள் அவரை வரவேற்றனர். பின்னர்தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இரவு தங்கினார்.
இன்று காலை கோவிலில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றை நோக்கிக் கிளம்பியஎம்பெருமான் கள்ளழகரை மக்கள் சரண கோஷம் எழுப்பிய வணங்கினர்.

சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அய்யனை வணங்கினர்.

சரியாக காலை 7.05 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்.

அப்போது அழகர் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து, கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் அழகரை வணங்கினர் லட்சோபலட்சம் பக்தர்கள். பச்சைப் பட்டுடன் ஆற்றில் அழகர் இறங்கியுள்ளதால், இந்த ஆண்டு முழுவதும் வேளாண் விளைச்சல் நன்றாகஇருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பல லட்சம் மக்கள் கூடுதலாகக் கண்டு களித்ததனர்.காலையில் இந்த நிகழ்ச்சி நடந்தபோது வெயிலும் குறைவாக இருந்தது.

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி மதுரை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும்ஒலிபெருக்கிகளில் பாட்டுக்கள் ஒலித்தவாறு இருக்கின்றன. மதுரை முழுவதிலும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சித்திரைத் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சித் திடலிலும் மாலை நேரங்களில் கூட்டம் அலை மோதியவண்ணம் உள்ளது.

ஆற்றில் இறங்கிய அழகர் சனிக்கிழமை மாலை வண்டியூர் செல்கிறார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை தேனூர் செல்கிறார்.அங்கு மண்டூக மாமுனிவருக்கு மோட்சம் வழங்குகிறார். அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு வைகை ஆற்றங்கரையோரம்உள்ள ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளி விடியவிடிய தசாவதாரம் எடுக்கிறார்.

இந்த நிகழ்ச்சியுடன் கடந்த 20 நாட்களாக நடந்து வந்த சித்திரைத் திருவிழா முடிவுக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+